தொழில் முனைவோர் அமைப்பு தொடக்க விழா

தொழில் முனைவோர் அமைப்பு தொடக்க விழா நடந்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர் அமைப்பு தொடக்க விழா
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேலுமனோகரன் பெண்கள் கல்லூரியில் புத்தொழில் தொழில் முனைவோர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் முதல்வர் காஞ்சனா வரவேற்றார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளர்ச்சி குழு முதன்மையர் சிவகுமார் இணையம் மூலம் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றினார். கல்லூரி செயலர் சகுந்தலா பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். ஆஸ்வா டெக்னாலஜிஸ் நிறுவனர் வானதி அமலன் புத்தொழில் தொடக்கம் குறித்தும், மாணவர்களுக்கு இந்த திட்டம் மூலம் எவ்வாறு பயனுள்ளதாக அமையக்கூடும் என்பது குறித்தும் பேசினார். ''இப்போ பே'' தலைமை நிர்வாக அதிகாரி மோகன் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் கிரிஜா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை புத்தொழில் தொழில் முனைவோர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அய்யப்பன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com