search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலதிபர்"

    • தொழிலதிபர் அடித்துக்கொலை? செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது48). இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். மேலும் கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை பார்த்தசாரதி கார் வாங்க பைபாஸ் ரோட்டில் மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் முருகேசன் என்பவருடன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவீட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் பார்த்த சாரதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அவர் முருகேசன் ஒர்க்ஷாப் பின்புறம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக மனைவி பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார்.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவரை மீட்ட பிரியா அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார். பார்த்தசாரதி உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன.

    எனவே அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவரது மனைவி பிரியாவும், கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டீயில் போதை மருந்து கலந்து கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
    • தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(வயது56), தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் ஊழியராக வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர்(34). இவர் சம்பவத்தன்று டீயில் போதை மருந்து கலந்து முதலாளி சஞ்சய்குமாரிடம் கொடுத்துள்ளார். டீயை குடித்ததும் சஞ்சய்குமார் மயங்கி விட்டார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடி விட்டு தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி சஞ்சய்குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற தனியார் ஊழியர் ஜிஜேந்தரை கைது செய்து அவர் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • வாடிப்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் தென்னை நார் கம்பெனி நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம் ராமநாதன் காரில் தனது கம்பெனிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ராமநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமநாதனிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் பொன்பெரு மாள் கோவில்தெருவை சேர்ந்த பரட்டை ஆறுமுகம் (35), ராமநாயக்கன்பட்டி செல்லையா (28), பேட்டை புதூர் கோபிநாத்ராஜா (35) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி செய்த பெண் ஜிம் பயிற்சியாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம்,

    மதுரை

    மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

    இதனை நம்பிய நான் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இது தவிர 2.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொடுத்தேன்.

    ஆனால் ஸ்வேதா குழுவினர் ஜிம் நடத்துவ தற்கான பணிகளில் ஈடுபட வில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதா, பிரியதர்ஷினி, ஸ்வேதா அத்தை, மற்றும் அவரது மகள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவினாசி:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 30). கோவையில் உள்ள பிரபல கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.

    இவருடன் அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஹில், சேலத்தை சேர்ந்த ஜெய்சூர்யா (18), கோவையை சேர்ந்த மிதுன் (16) ஆகியோரும் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அய்யப்ப பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன்ராஜ் உள்பட 4பேரும் பவானிக்கு சென்றனர். அங்கு பஜனையை முடித்து விட்டு இன்று அதிகாலை கோவைக்கு காரில் புறப்பட்டனர். காரை சுஹில் ஓட்டினார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை பகுதியில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வணிக வரி அதிகாரி என கூறி தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.
    • போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனில் பேசிய மர்ம நபர் தான் சென்னை வடக்கு மண்டல வணி வரித்துறை இயக்குநரின் உதவியாளர் என கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. எனவே வருகிற 30-ந் தேதி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவோம். இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலமாக அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

    தவறினால் உங்கள் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இதுகுறித்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து விசாரித்த போது போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    இது தொடர்பாக வணிகவரி இணை ஆணையரிடம் புகார் தரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவராஜ் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
    • வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பண்டரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55). தொழிலதிபர். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த அதிர்ச்சடைந்த அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    • காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி. கண்ணனின் தாயார் காலமானார்.
    • அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி

    காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப்பையா அம்பலத்தின் மனைவியும், காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி.கண்ணனின் தாயாரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணி இணைச் செயலாளர்- காரைக்குடி நகர் மன்ற உறுப்பினருமான கே.ஆர்.எஸ்.பி.கே.தேவன் மற்றும் கே.ஆர்.எஸ்.பி.கே.ஞானேஸ்வரன் ஆகியோரின் அப்பத்தாவுமான சோலச்சி அம்மாள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் காலமானார். அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று பகல் நியூடவுனில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெற்குதெருவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • வின்னர் இல்ல திருமண விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்- தமிழரசி தம்பதியரின் மகள் சுயம்பு கனிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சி அம்மன்புரம் முருகன் -லதா தம்பதியரின் மகன் பொறியாளர் அர்ஜூனுக்கும் கன்னிராஜபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

    நாராயணன்- மகாலட்சுமி, அழகு லிங்கம் -கலைச்செல்வி, நடராஜன்- வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராசு உறவினர்கள் கீழக்கரை மகாலட்சுமி, நளினராஜா, பாதேசுவரி, பிரேமதி தமிழரசி, ராஜாங்கம், சத்தியபிரியா, செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்யா, சரவணன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலிங்கம், ஆதிபராசக்தி, புஷ்பரதி, சுரேஷ், நடராஜன், தினேஷ் லிங்கம், வான்மதி, பிரம்ம லிங்கம், காயத்ரி.

    செவல்பட்டியைச் சேர்ந்த அருணா தேவி, ராஜவேல், சாயல்குடி வி.வி.ஆர். நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி, சிவஞான குருநாதன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, பால சிந்தாமணி, மதுரையைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை, ராஜாங்கம், ஜெயராமன், விஜி பாரதி, வேல்முருகன், ஜெயராணி, காளிராஜன், மாரி, சண்முகம்.

    பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த சரசுவதி முருகேசன், பாலசுப்பிரமணியன், அனிதா, கன்னிராஜ புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரி, ராஜீவ் காந்தி, சாயல்குடி வி.வி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜ பெருமாள், புஷ்பவள்ளி தனசேகரராஜா, செல்லின், பார்த்திபராஜா, வின்னரசி, குலசேகர ராஜா.

    கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், வைதேகி உள்ளிடட உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    • 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்

    மங்கலம் :

    தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்றது இதில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் , இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் மாவட்டம், இடுவாய் , திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக்தனபால் தனிநபர் -50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

    கேரளாவில் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் தொழிலதிபர் ஈடுபடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள எடப்பால் என்ற இடத்தில் உள்ள ஒரு சினிமா தியேட் டரின் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு காமிரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் மைதீன்குட்டி என்பது தெரியவந்தது. தொழில் அதிபரான அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    அந்த சிறுமியுடன் தியேட்டருக்கு வந்த பெண்ணையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அந்த பெண் சிறுமியின் தாயாரா? அவருக்கும் சிறுமிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் செக்ஸ் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  #tamilnews
    ×