search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி"

    • சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.
    • கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரைதேசிய கொடியை முகப்புப்படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    சிவகாசி

    75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல், இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தேசியக் கொடி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.

    சுதந்திர தின விழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டில் இன்று காலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன். சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேரணியை நகரசபை துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் பங்கேற்ற வீடுதோறும் தேசிய கொடி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆண்டாள் கோவில் முன்பு, பேரணியை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை முன்னிலை வகித்தனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் வரவேற்றார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் ஆண்டாள் சன்னதியை அடைந்தது. இதில் 11 குறுவள மையங்களைச் சேர்ந்த சுமார் 300 தன்னார்வலர்கள் சீருடை அணிந்து, தேசியக் கொடியை ஏந்தி அணிவகுத்து வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா தமிழ் வழி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர்11குறுவளமையதன்னார் ஒருங்கிணைப்பா–ளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்கள் லாவண்யாதேவி, சூர்யா, சித்ரா, நிரோஷா, அமுதவல்லி, சுமதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

    • சாயல்குடி பேரூராட்சி சார்பில் தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்தது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள் ஆபிதா அனிபா அண்ணா, குமரையா, மாணிக்கவேல், அமுதா, கோவிந்தன், இந்திரா செல்லத்துரை உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன.
    • வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி தங்கள் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    75-வது சுதந்திர தினவிழாைவ முன்னிட்டு வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்கள் மூலம் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வந்தது.

    மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது. இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் திண்டுக்கல் நகரில் நேற்றே வீடுகள் தோறும் கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் ஒவ்வொரு வீடுகள் முன்பும் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

    மேலும் அந்த கொடியின் முன்பு தங்கள் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனால் தெருக்கள் அனைத்திலும் தேசியக்கொடி அணிவகுத்து காணப்பட்டது.

    நாகர்கோவில், ஆக. 12-

    கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பான முன் னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர் களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்டகலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அலுவலர் களுடனான கலந்தாய்வு மேற்கொ ண்டார் . பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை வெகுசிறப்பாக கொண் டாடுவது குறித்தும், சுதந் திர போராட்ட வீரர்களின் தியாகத்தினை பொதுமக்க ளிடையே எடுத்து கூறுவது மற்றும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாகவும், தேச பக்தியினை உணர்த்தும் விதமாகவும் நாளை 13-ந்தேதி காலை முதல் 15-ந்தேதி சூரியன் மறையும் வரை (மாலை 6 மணி) கன்னியாகு மரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறு வன கட்டிடங்களின் முகப் பில் முழு மரியாதையுடன் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 2 லட்சத்து 25 ஆயிரம் தேசிய கொடிகள், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகு திகளில் 70 ஆயிரம் தேசிய கொடிகள், கொல்லங்கோடு நகராட்சியில் 15 ஆயிரம் தேசிய கொடிகள் , பத்ம நாபபுரம் நகராட்சியில் 5 ஆயிரம் குழித்துறை நகராட்சியில் 6 ஆயிரம் தேசிய கொடிகள்.

    குளச்சல் நகராட்சியில் 6 ஆயிரம் தேசிய கொடிகளை வீடுகளின் முகப்பில் முழு மரி யாதையுடன் ஏற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாளை 13-ந்தேதி அன்று அரசு அலுவலகங்கள் , பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறு வன கட்டிடங்களின் முகப் பில் முழு மரியாதையுடன் தேசிய கொடியினை ஏற் றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    மாவட்டத் திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி களில் தேர்ந் தெடுக்கப்பட்ட உள்ளாட் சித் தலைவர்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று தேசிய கொடி யேற்றுவதை உறுதிப்படுத் திடதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    13-ந் தேதி அன்று காலை முதல் 15 ம் தேதி அன்று சூரி யன் மறையும் நேரத்தில் தேசிய கொடியினை , முழு மரியாதையுடன் கீழே இறக்கி பத்திரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களுக்கு தேசியக் கொடி அனுப்பும் பணி நடந்து வருகிறது.
    • தேசியக்கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு, வீடாக நேற்று விநியோகிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப்பெரு விழாவை யொட்டி அனைத்து வீடுகள், அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

    அதனடிப்படையில் மாவட்ட அளவில் 1 லட்சத்து 50 ஆயிரம் தேசியக்கொடிகள் பொதுமக்கள், அரசு அலுவலா்கள் ஆகியோருக்கு விநியோகிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக்குழு மூலம் ஏற்கெனவே 50 ஆயிரம் தேசியக் கொடிகள் நகராட்சி, பேரூராட்சிகளில் விநியோகி க்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 1 லட்சம் தேசியக் கொடிகள் 10-க்கும் மேற்பட்ட பண்டல்களாக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை பிரிக்கப்பட்டு, அதிலிருந்த தேசியக் கொடிகளில் நகராட்சிகளில் ராமநாதபுரம், பரமக்குடிக்கு தலா 3 ஆயிரம், கீழக்கரை 1500, ராமேசுவரம் 1000 என அனுப்பி வைக்கப்பட்டது.

    ஒன்றிய அளவில் ராமநாதபுரம் 7,900, திருப்புல்லாணி 8,900, மண்டபம் 11,300, ஆா்எஸ்.மங்கலம் 4,900, திருவாடானை 7,700, போகலூா் 3,000, பரமக்குடி 5,700, நயினாா்கோவில் 3,500, முதுகுளத்தூா் 6,400, கமுதி 7,700, கடலாடி 11,500 என தேசியக் கொடிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மீதமுள்ள கொடிகள் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் நகராட்சி வாா்டுகளில் தேசியக்கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு வீடாக நேற்று விநியோகிக்கப்பட்டது. மேலும் கொடியைப் பெற்றுக் கொண்டவா்கள் முகவரி விவரம் பதிவு செய்யப்பட்டதுடன், சுதந்திரதினத்துக்குப் பிறகு தேசியக் கொடியை மீண்டும் அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட மகளிர் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களுக்கு குறைந்தது 1000 முதல் அதிகபட்சம் 11,300 வரை தேசியக் கொடிகள் விற்பனைக்கு அனுப்பியுள்ளனர்.

    மேற்கண்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர், சுகாதாரப்பணியாளர்கள், அலுவலர்கள் வீடுவீடாக சென்று ஒரு தேசியக்கொடி ரூ.21 வீதம் விற்கின்றனர். அப்போது அவர்களின் பெயரை எழுதிக் கொள்கின்றனர். 3 நாட்களுக்கு பிறகு தேசியக்கொடியை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும், என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அனைத்து வீடுகளிலும் 3 நாட்கள் தேசியக்கொடி பறக்க விட வேண்டும். அதன் பிறகும் கொடியை பாதுகாப்பது அவசியமாகும். சிலர் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் தேசியக்கொடிக்கு அவமதிப்பு ஏற்படுவதை தவிர்க்க விற்பனை செய்த கொடிகளை மீண்டும் திரும்ப வாங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    • விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து இந்து முன்னணியினர் தேசியக்கொடி அணிவகுப்பு பேரணி சென்றனர்.
    • எட்டையாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய விதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

    விளாத்திகுளம்:

    75-வது சுதந்திர தின பவள விழா ஆண்டில் வீடுகள் மற்றும் வணிக வளங்களில் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் வைத்து இந்து முன்னணி மாநில செயலாளர் வி.பி ஜெயக்குமார் தேசியக்கொடி அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் முக்கியசாலைகளான எட்டையாபுரம் சாலை, மதுரை சாலை, வணிக வளாக சாலை, காய்கறி மார்க்கெட் பகுதி வேம்பர் ரோடு உள்ளிட்ட முக்கிய விதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் சிவசுப்பையா, விஷ்வ இந்து பரிசத் ஒன்றிய தலைவர் ராம காளியப்பன், மாவட்ட பொது செயலாளர் சரவணன் கிருஷ்ணன், பிரச்சார அணி மாவட்ட செயலாளர் பெஞ்சமின் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வேல்முருகன், புதூர் ஒன்றிய பொதுச் செயலாளர் பழனி முருகன், ஒன்றிய பட்டியல் அணி தலைவர் எபினேசர், ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் ரமேஷ் ராஜா, ஒன்றிய விவசாய அணி துணை தலைவர் ராஜா, குருவார் பட்டி பாலமுருகன், மீனவர் அணி சுபாஷ் சந்திரபோஸ், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவர் சோலை ராஜ், சிறுபான்மையினர் ஒன்றிய பிரிவு டேவிட், பள்ளிவாசல் பட்டி சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் லீலாவதி, ஒன்றிய பிரச்சார பிரிவு துணைத் தலைவர் ராஜ்குமார், நாகலாபுரம் காளிமுத்து தலைவர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடுகளில் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
    • தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுப்பு.

    புதுடெல்லி :

    சுதந்திர தின 75-வது அமுதபெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசிய கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசிய கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளனர்.

    • வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
    • ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர்.

    புதுடெல்லி :

    சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி வீடுகள்தோறும் 13 முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து உள்ளது.

    அதேநேரம் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு பல இடங்களில் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    அதில் ரூ.20 கொடுத்து தேசியக்கொடி வாங்க வற்புறுத்துவதாக சில ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுவது பதிவாகி இருக்கிறது.

    இது குறித்து அவர், 'சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் ஏழைகளுக்கு ஒரு சுமையாக மாறினால், அது துரதிர்ஷ்டவசமானது. ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர். வாங்காதவர்களுக்கு ரேஷன் உணவுப்பொருட்கள் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் தேசியக்கொடிக்காக ஏழைகளின் உணவை பறித்து எடுப்பது வெட்கக்கேடானது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    • திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 971 வீடுகளுக்கு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனர்
    • சுதந்திர திருநாள் ஆண்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்வகையில் மாவட்டநிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர திருநாள் ஆண்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்வகையில் மாவட்டநிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 நகராட்சிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 50 ஆயிரத்து 633 மூவர்ண தேசியக் கொடிகள் தயார் செய்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியில் 35 மகளிர் சுய உதவி குழுக்கள் ஈடுபட்டு ள்ளனர். தேசியக்கொடிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கின. திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 971 வீடுகளுக்கு வழங்கும் பணியினை நகர மன்ற தலைவர் பவனப்ரியா செந்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர் அசோகன், துப்புரவு அலுவலர் மூர்த்தி, நகர மன்ற எழுத்த செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்
    • 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 40 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அந்த தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற பெற்றோர்களுக்கு மாணவர்கள் கடிதம் எழுதினர்.
    • இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    மானாமதுரை

    வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி மன்கிபாத் உரையில் நாடு முழுவதும் வீடுகள் தோறும் வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அதனை தமிழக அரசு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.இந்த விசயத்தை மாணவர்கள் மூலமாக பெற்றோருக்கு கொண்டு செல்ல கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

    அதன்படி சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளி செயலாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து கடிதம் எழுதும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சல் அட்டை இலவசமாக வழங்க பட்டது. மாணவர்கள் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை தெரிவித்து வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்களும் நமது வீட்டில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினர். பின்னர் அதில் பெற்றோர் முகவரி எழுதி அஞ்சல் நிலையத்தில் கொடுத்தனர்.

    மாணவர்களிடையே கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    ×