search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நான்கு வழி சாலை"

    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் :

    டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரியை விஜய்வசந்த் எம்.பி. சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக் காக தங்களின் நிலத்தை அரசுக்கு வழங்கிய மக்களுக்கு போதிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக திருப்பதி சாரம், குன்னத்தூர், பேரூர், கப்பியறை, ஆளூர், தோவா ளை, பெருங்குடி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்குட்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு வதில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.

    நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013-ன்படி இழப்பீடு தொகையை மாவட்ட கலெக்டர் முன் 2018 பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின் போது வழங்க ஒத்துக்கொண்டனர். பின்னர் நெடுஞ்சாலைத் துறை உரிய இழப்பீடு தொகை வழங்க மறுத்து விட்டது. இந்த கிராமங்களுக்கு பழைய சட்டத்தின் கீழ் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தெரிவித்தது.

    2021-ம் ஆண்டுக்கு பின்னர் இழப்பீடு வழங்கு வதை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் 251 நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்ட பின்னரும், இந்த தொகையை வழங்கு வதற்கு நெடுஞ்சாலைத்துறை மறுத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தாங்கள் தயவு கூர்ந்து நெடுஞ்சாலை துறையை அறிவுறுத்தி, நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று தாமதம் இன்றி உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு வழி சாலை திட்டப்பணியை விரைவாக முடிப்பதற்கு இது மிகவும் முக்கியம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • நான்கு வழிச்சாலையில் புத்தேரி குளத்தின் மேல் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்கு வதற்கான நடவடிக்கை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்த புரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நில ஆர்ஜித பணிகள் முடிவடைந்து பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பல்வேறு இடங்களில் பணிகள் முடிவ டைந்துள்ளது. ஒரு சில இடங்களில் பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. குறிப்பாக குளங்களை மணல் நிரப்பி மூடி சாலைகள் அமைப்ப தற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் உள்ள குளங்களை மூடாமல் அதற்கு மேல் மேல்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நான்கு வழிச்சாலையில் புத்தேரி குளத்தின் மேல் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்பொழுது பணியை மீண்டும் தொடங்க நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து மணலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 9 குளங்களிலிருந்து கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒரு சில குளங்களிலிருந்து மணல் எடுக்க மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மணல் எடுப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மணல்களை கொண்டு வந்து பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நான்கு வழிச்சாலையில் மேலும் 64 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் ஒரு சில இடங்களில் குளத்தின் மேல்மட்டபாலம் அமைக்க வேண்டியது உள்ளது. அந்த பாலம் அமைக்க உள்ள இடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துவருகிறார்கள்.

    ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் குளத்தில் உள்ள மணலை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப பாலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தோட்டியோடு பகுதியில் குதிரைபாஞ்சான் குளத்தில் மேல்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. அந்த குளத்தில் உள்ள மணலின் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதற்கு ஏற்ப குளத்தில் இருபுறமும் மணல்கள் நிரப்பி பில்லர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலப்பணிகள் முடிவடைந்ததும் குளத்தில் போடப்படும் மணல்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை பணிகள் முற்றிலுமாக முடிவடையும் பட்சத்தில் கன்னியாகுமரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு போக்குவரத்து நெருக்கடி இன்றி குறைவான நேரத்தில் செல்ல முடியும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

    • உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
    • அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த புது வாயல் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை, பழவேற்காடு மார்க்கமாக அதானி துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழி சாலையாக மாற்றுவதற்காக ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதன் ஒரு பகுதியாக பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்கவனம் கிராமத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், ஐந்து கோயில்கள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டு நான்கு வழி சாலை, இணைப்பு மேம்பாலம் அமைப்பதற்காக அங்குள்ள குடியிருப்பு வாசிகளை உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை திடீரென வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற கூறுவது ஏற்க முடியாது என்றும், புது வாயலில் இருந்து ஏலியம்பேடு, சின்ன கவுனம் இடையே பல ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அதன் வழியாக நான்கு வழி சாலையை அமைப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இது குறித்து ஏற்கனவே நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்ட போதிலும், தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ள கிராம மக்கள், நான்கு வழி சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி பொன்னேரி-பழவேற்காடு இடையே செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியர் செல்வகுமார், போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது சமாதானத்தை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டதோடு நான்கு வழி சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சார்பு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காவல்கிணற்றில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.ஒரு சில இடங்களில் மட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    வெள்ளமடம் பகுதியில் நான்கு வழி சாலை பகுதியில் சாலையில் சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்புகளை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது பற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் பலியானவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்
    • 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி 40 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 40 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அந்த தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×