search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டியோடு அருகே நான்கு வழி சாலைக்காக மேல்மட்ட பாலம் அமைக்கும் குளத்தில் மண் ஆய்வு
    X

    தோட்டியோடு அருகே நான்கு வழி சாலைக்காக மேல்மட்ட பாலம் அமைக்கும் குளத்தில் மண் ஆய்வு

    • நான்கு வழிச்சாலையில் புத்தேரி குளத்தின் மேல் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்கு வதற்கான நடவடிக்கை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்த புரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நில ஆர்ஜித பணிகள் முடிவடைந்து பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பல்வேறு இடங்களில் பணிகள் முடிவ டைந்துள்ளது. ஒரு சில இடங்களில் பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. குறிப்பாக குளங்களை மணல் நிரப்பி மூடி சாலைகள் அமைப்ப தற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் உள்ள குளங்களை மூடாமல் அதற்கு மேல் மேல்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நான்கு வழிச்சாலையில் புத்தேரி குளத்தின் மேல் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்பொழுது பணியை மீண்டும் தொடங்க நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.1041 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து மணலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 9 குளங்களிலிருந்து கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஒரு சில குளங்களிலிருந்து மணல் எடுக்க மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மணல் எடுப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மணல்களை கொண்டு வந்து பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நான்கு வழிச்சாலையில் மேலும் 64 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் ஒரு சில இடங்களில் குளத்தின் மேல்மட்டபாலம் அமைக்க வேண்டியது உள்ளது. அந்த பாலம் அமைக்க உள்ள இடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துவருகிறார்கள்.

    ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் குளத்தில் உள்ள மணலை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப பாலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தோட்டியோடு பகுதியில் குதிரைபாஞ்சான் குளத்தில் மேல்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. அந்த குளத்தில் உள்ள மணலின் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதற்கு ஏற்ப குளத்தில் இருபுறமும் மணல்கள் நிரப்பி பில்லர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலப்பணிகள் முடிவடைந்ததும் குளத்தில் போடப்படும் மணல்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை பணிகள் முற்றிலுமாக முடிவடையும் பட்சத்தில் கன்னியாகுமரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு போக்குவரத்து நெருக்கடி இன்றி குறைவான நேரத்தில் செல்ல முடியும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

    Next Story
    ×