search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா இந்தியா தொடர்"

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.
    • செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. 'பாக்சிங் டே' என்றால் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இந்த பெயருக்கு சில சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26-ந்தேதி அன்று அந்த பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்குவார்கள். இப்படியாக பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்துமஸ் பாக்ஸ் வழங்கும் பழக்கம் இருந்தது. இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    இன்னொரு காரணமும் உண்டு. முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் நிறைவு பெற்றதும் அந்த பெட்டி பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் 'பாக்சிங் டே' பெயருக்கு ஒரு அச்சாரமாக சொல்லப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை (பிற்பகல் 1.30 மணி) தொடங்குகிறது. இதுவும் 'பாக்சிங் டே' என்றே அழைக்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலை தவிர்த்து மற்றபடி 'பாக்சிங் டே' அன்று தங்கள் நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது.

    'பாக்சிங் டே' போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.
    • ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்.

    செஞ்சூரியனில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பணிக்கு லோகேஷ் ராகுலை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. இஷான்கிஷன், மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி இந்த தொடரில் இருந்து விலகி விடடார்.

    லோகேஷ் ராகுல், வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருக்கிறார். ஆனால் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணி என்பது மிகவும் கடினம். அது குறித்து அவரிடம் ஆலோசித்து இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் டிராவிட் கூறுகையில், 'டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணியை சவாலான ஒன்றாக பார்க்கிறேன். இதுகுறித்து ராகுலிடம் பேசிய போது மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அந்த முயற்சிக்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை என்பது தெரியும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கீப்பிங் பணியை கவனிக்கிறார். இருப்பினும் கடந்த 5-6 மாதங்களாக விக்கெட் கீப்பராக நன்றாக செயல்படுகிறார். ராகுல் கீப்பராக இருக்கும் போது, கூடுதலாக ஒரு பேஸ்ட்மேனை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.

    • இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார்.
    • 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

    36 வயதான டீன் எல்கர் வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை சொந்த மண்ணில் நடைபெறும் 2 ஆட்டங்கள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

    இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், 'கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும். சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் ஆடியதை கவுரவமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். இது நம்பமுடியாத ஒரு அருமையான பயணமாகும். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுபோல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு கடைசி போட்டியாகும். ஏனெனில் இந்த அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்' என்றார்.

    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    • ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து வருகிற 26-ந் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றிருந்த விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணங்களுக்காக சொந்த நாடு திரும்புகிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு கலந்து கொள்ளும் வகையில் திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    மற்றொரு வீரரான ருதுராஜ் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத். 

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    பார்ல்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

    இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை சஞ்சு சாம்சன் பதிவு செய்துள்ளார்.

    பார்ல்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நேற்று பகல்-இரவாக நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 108 ரன்களில் (114 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இதனையடுத்து 297 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த மற்றொரு வீரரான கருண் நாயர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அரைசதம் அடித்தது இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு போட்டியில் 300 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

    • சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.
    • சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    பார்ல்:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் (108 ரன்) சதம் அடித்தார்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக டோனிபூ ஜோர்ஜி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

    இளம் வீரர்களை கொண்ட அணியாக தொட ரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் மீண்டும் தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வீரர்களுடன் நான் ஐபிஎல்லில் நிறைய விளையாடியிருக்கிறேன்.தற்போது அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

    இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் கூறினேன். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன். அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனால் சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை வீரர்களுடன் கொண்டாடிவிட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 10 விக்கெட் கைப்பற்றி அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிகாவும் வெற்றி பெற்றன.

    • இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார்.
    • சஞ்சு சாம்சன் 108 ரன்களை குவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-யை தொடர்ந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியின் மூலம் இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார்.

     


    இந்திய அணிக்கு ராஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. இவர்கள் முறையே 22 மற்றும் 10 ரன்களை குவித்து ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இவருடன் விளையாடிய கேப்டன் கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 108 ரன்களை குவித்து வில்லியம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடி 38 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ஹென்ரிக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், பர்கர் இரண்டு விக்கெட்டுகளையும், மல்டர், மகாராஜ், வில்லியம்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    பார்ல்:

    இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்தநிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற புள்ளிகணக்கில் சமனில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமாகிறார்.

    ருதுராஜ் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ராஜத் படிதார் இடம் பெற்றுள்ளார். குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியா:

    சாய் சுதர்சன், சஞ்சு சாம்சன், ராஜத் படிதார், திலக் வர்மா, லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.


    தென்ஆப்பிரிக்கா:

    ரீஜா ஹென்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, வான்டெர் டஸன், மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டெர், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், லிசாத் வில்லியம்ஸ், பீரன் ஹென்ரிக்ஸ்.

    • தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவர்களில் துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டோனி அபாரமாக ஆடினர். ஹென்ரிக்ஸ் - டோனி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.

    அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா என ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் கிடைக்காததால் கேஎல் ராகுல் ரிங்கு சிங்குக்கு பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.

    ரிங்கு சிங் பந்து வீச்சில் டுசென் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் திறமையின் உச்சம் என பாராட்டி வருகின்றனர். ஒரு ஓவர் மட்டும் வீசிய ரிங்கு சிங் 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • கேஎல் ராகுல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் 2-வது ஒருநாள் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - சாய் சுதர்சன் களமிறங்கினர். ருதுராஜ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த திலக் வர்மா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 10 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து சாய் சுதர்சனுடன் கேப்டன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். பிறகு 1 ரன் எடுப்பதற்கே மிகவும் திணறினார். இதனால் 23 பந்துகள் சந்தித்த அவர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங் 17, அக்ஷர் படேல் 7, குல்தீப் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

    இறுதியில் இந்தியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் அறிமுகமாகி உள்ளார்.

    ×