search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சஞ்சு சாம்சன் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    சஞ்சு சாம்சன் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவுக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார்.
    • சஞ்சு சாம்சன் 108 ரன்களை குவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-யை தொடர்ந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியின் மூலம் இந்திய அணியில் ராஜத் படிதார் அறிமுகமானார்.


    இந்திய அணிக்கு ராஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. இவர்கள் முறையே 22 மற்றும் 10 ரன்களை குவித்து ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இவருடன் விளையாடிய கேப்டன் கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 108 ரன்களை குவித்து வில்லியம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடி 38 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ஹென்ரிக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், பர்கர் இரண்டு விக்கெட்டுகளையும், மல்டர், மகாராஜ், வில்லியம்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×