search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    துரதிர்ஷ்டவசமாக சாம்சனுக்கு டாப் ஆர்டரில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை- கேஎல் ராகுல்
    X

    துரதிர்ஷ்டவசமாக சாம்சனுக்கு டாப் ஆர்டரில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை- கேஎல் ராகுல்

    • சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.
    • சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    பார்ல்:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் (108 ரன்) சதம் அடித்தார்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக டோனிபூ ஜோர்ஜி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

    இளம் வீரர்களை கொண்ட அணியாக தொட ரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் மீண்டும் தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வீரர்களுடன் நான் ஐபிஎல்லில் நிறைய விளையாடியிருக்கிறேன்.தற்போது அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

    இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் கூறினேன். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன். அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனால் சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை வீரர்களுடன் கொண்டாடிவிட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 10 விக்கெட் கைப்பற்றி அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிகாவும் வெற்றி பெற்றன.

    Next Story
    ×