என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு- இந்திய ஒருநாள் அணியில் ரிங்கு சிங் அறிமுகம்
- முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் அறிமுகமாகி உள்ளார்.
Next Story






