search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடன்"

    • போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
    • ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் முன்நின்ற மரியசெல்வி என்ற பெண்மணியிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றார்கள். உடனே குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

    அன்று மாலையில் நித்திரைவிளை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செயினை பைக்கில் வந்த வாலிபர்கள் திருடி சென்றார்கள். ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.

    இவர்களை பிடிக்க உதவி ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் 5 போலீசார்களை மாவட்ட எஸ்.பி. தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில் நேற்று மாலை குலசேகரம் பகுதியில் சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் சுற்றுவது குலசேகரம் போலீசுக்கு தெரியவந்தது.

    உடனே குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்படை உதவி ஆய்வாளர் அருளப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துபிடித்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் கருமன் விளை பாறசாலை பகுதியை சேர்ந்த மணிஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் இவரும் இவரது நண்பர் யாசிர் 2 பேரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் திருடியது தெரியவந்தது.

    இவர்கள் மீது குலசேகரம், நித்திரவிளை, கோட்டார் போன்ற பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவரிடம் இருந்து ரூ.2000 பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட நகைகள் அனைத்தும் யாசிரிடம் உள்ளது என்று கூறினர். யாசிரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால்தான் திருட்டு நகைகள் அனைத்தும் மீட்க முடியும்.

    • கடந்த 16-ந்தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது.
    • தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (வயது 35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரும், அமல்தேவும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் கூறினார். இதையடுத்து அமல்தேவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது, நண்பர் வீட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் விவரம் வருமாறு:-

    போலீஸ்காரராக பணியாற்றி வந்த அமல்தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடிமையான அமல்தேவ் இதில் ரூ.30 லட்சத்தை இழந்து கடனாளியானார். மேலும், தனக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் இந்த விளையாட்டிலேயே இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கத் தொடங்கினர்.

    இந்தநிலையில் கடனை அடைக்க தனது நண்பர் வீட்டில் திருட திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு யாரும் அவரை கவனிக்காத நேரத்தில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடிய நகைகளில் சிலவற்றை அப்பகுதியில் அடகு வைத்ததும், மீதி இருந்த நகைகளை விற்றதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க போலீஸ்காரர் அமல்தேவ் தனது நண்பர் வீட்டில் திருடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளையன் வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து. கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
    • இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே சேந்தங்குடி கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ஜான் விக்டர் (64).தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார். இவரது மகன் சார்லஸ் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று ஜான் விக்டர் அவரது மனைவி ரோஸ்மேரி மற்றும் மருமகள் அரசி பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்

    இந்நிலையில் கொள்ளையன் பூட்டி இருந்த வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.

    இந்நிலையில், இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

    மதியம் வீட்டிற்கு வந்த பணியாட்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜான் விக்டருக்கு தகவல் அளித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ஜான் விக்டர் வீட்டுக்கு உடனடியாக சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    இதனிடையே வெளியூர் சென்றிருந்த ஜான் விக்டரும் உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.

    அதிர்ச்சியுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை போகியுள்ளதா என்று பார்த்தபோது இரண்டு அறைகளை உடைத்து இருந்த திருடன் நகை பணம் உள்ள அறையினை உடைக்காமல் சென்றது தெரிய வந்தது.

    அந்த அறைகளில் சுமார் 70 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்தது என ஜான் விக்டர் தெரிவித்தார்.

    கொள்ளையன் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்து வீட்டில் நுழையும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது இதனை கைப்பற்றி சீர்காழி போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

    • 4 ந் தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார்.

    உடுமலை :

    உடுமலை அருகே கொடுங்கியத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46) இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 4 ந்தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். இந்நிலையில் ஆண்டியூர் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் 2 ஆடுகளுடன் வந்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த செல்வராஜ்( 52) குஞ்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்தான் மேற்கண்ட 2 ஆடுகளையும் திருடியது தெரிய வந்தது இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து ஆடுகளை மீட்டனர்.

    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை‌. உடனே பதறிப்போன கண்ணன் இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருசக்கர வாகனம் திருட்டுப் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஏதாவது திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை செய்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் இருசக்கர வாகனத்தில் மேலே ஒருவன் ஏறி இருந்து 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் வழக்குப்பதிவு செய்து. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடி சென்றனர்.
    • பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

    தாராபுரம் :

    தாராபுரம் எல்லிஸ் நகர் டி.எஸ். எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 67), பால் வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் கார்த்திக். இன்று காலை விஜயன் பால் வியாபாரம் செய்ய வீட்டிலிருந்து சென்று விட்டார். விஜயலட்சுமி உழவர் சந்தைக்கும் கார்த்திகேயன் வாக்கிங் சென்று விட்டனர்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அரை பவுன் கம்மல் மற்றும் 60 கிராம் மதிப்புள்ள வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் அதே பகுதி பத்மாவதி நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கிரில் கேட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். பொதுமக்கள் சத்தம் போடவே கொள்ளையன் அங்கிருந்து ஓடி விட்டான் .

    தாராபுரம் ஆர் .கே .ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மனைவி தேவிகா . இவர்களது வீட்டில் கதவை உடைக்கும் முயன்ற போது தேவிகா கையை வைத்து தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த கொள்ளையன் கதவை உடைக்காமல் அவரது கையை கத்தியால் கீறி விட்டு தப்பி ஓடி விட்டான். தாராபுரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

    • 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை பிரான்சிஸ் வளர்த்து வருகிறார்
    • கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ,மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுமார் 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில்,கடைக்கு பொருள் வாங்குவது போல வந்த ஒருவர் பிரான்சிஸ் கடைக்குள் வேலையாக இருந்தபோது ஆட்டுக்குட்டியை நைசாக மோட்டார்சைக்கிளில் வைத்து திருடிச் சென்றார். பின்னால் அவரை தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து பிடித்து தர்ம அடி கொடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை செய்தபோது சூலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ், (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் பெருமாள்கோவிலை சேர்ந்தவர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மேட்டார் சைக்கிள் திடீரென மாயமானது.
    • அக்கம் பக்கத்தில் தேடிய போது அந்த மோட்டார் சைக்கிள் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டு கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் பெரு மாள்கோவிலை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 55) . இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மேட்டார் சைக்கிள் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது அந்த மோட்டார் சைக்கிள் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம் மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வெள்ளார் ஜே.ஜே. நகரில் வசித்து வரும் செல்வகுமார் (23) என்பவர் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வெள்ளாரில் திருடிய அந்த மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் தீ வைத்து எரித்ததாக கூறினார். மேலும் இது போல பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதாகவும் கூறினார். மேலும் எங்கெங்கு மோட்டார் சைக்கிளை திருடினார் என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர். 

    • வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை.
    • வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேகாமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது37).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். இந்தநிலையில் கோவிலுக்குச் சென்ற சம்பத்குமாரை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்குள் யாரோ வந்தது போலவும், சமையலறைக்குள் இருந்து யாரு என கேட்டதாகவும், பதில் வராததால் வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

    போலீசார்விசாரணையில் சம்பத் குமாரின் வீட்டிற்கு சென்று திருட முயன்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பஸ்வான் (30,) பந்தேப் பக்டி(32) பாபன் புயனா(21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×