தெங்கம்புதூர் அருகே கண்காணிப்பு காமிராவில் சிக்கிய வாகன திருடன்

சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.
தெங்கம்புதூர் அருகே  கண்காணிப்பு காமிராவில்  சிக்கிய வாகன திருடன்
Published on

கன்னியாகுமரி:

தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை‌. உடனே பதறிப்போன கண்ணன் இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருசக்கர வாகனம் திருட்டுப் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஏதாவது திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை செய்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் இருசக்கர வாகனத்தில் மேலே ஒருவன் ஏறி இருந்து 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் வழக்குப்பதிவு செய்து. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com