search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமதம்"

    • விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்க முடியாமல் காத்து கிடக்கின்றனர்.
    • விவ–சாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    ராராமுத்திரகோட்டை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    • ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • விசாரணையில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரியவந்தது.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை- தரங்கம்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் லாரி மோதியதால் ஓ.எச்.டி லைன் அறுந்து விழுந்து கேட் சிக்னல் பழுதானது.

    இதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே பணியாளர்கள் இரவில் உடனடியாக மேற்கொண்டனர். சிக்னல் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆடுதுறை கேட்பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக ரெயில்களில் டீசல் என்ஜின் பயன்படுத்தி இயக்கப்பட்டது.

    • திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சென்னை, கேரளா செல்லக்கூடிய ரெயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, கேரளா செல்லக்கூடிய ெரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மங்களூர் சென்ட்ரலில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில் தினமும் காலை 8.08 மணிக்கு திருப்பூருக்கு வந்து 8.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இந்த ெரயில் இன்று 5 மணி நேரம் 30 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.அதன்படி இந்த ெரயில் திருப்பூருக்கு மதியம் 1:30 மணிக்கு வந்து 1:32க்கு புறப்படும்.

    அதேபோன்று திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய சிறப்பு ரெயில் 6 மணி நேரம் 14 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது.அதன்படி திருப்பூருக்கு பிற்பகல் 3.57 மணிக்கு வந்து 3.59 மணிக்கு புறப்படும். கோர்பாவில் இருந்து கொச்சுவேலி வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.43 மணிக்கு வந்து 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 10 மணி நேரம் 23 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி இந்த ரெயில் மாலை 4.07 மணிக்கு திருப்பூருக்கு வந்து 4.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இதேபோன்று பல்வேறு ரெயில்கள் இன்று ஒரு மணி நேரம் ,2 மணி நேரம் தாமதமாகவே திருப்பூருக்கு வந்தது. காலை திருப்பதி மற்றும் சென்னை செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரெயில் 50 நிமிடங்கள் தாமதமாக திருப்பூருக்கு வந்தது. இதேபோன்று திருவனந்தபுரம் செல்லக்கூடிய கேரளா எக்ஸ்பிரஸ், சில்சர் - கோவை எக்ஸ்பிரஸ், தன்பா செல்லக்கூடிய ரெயில்களும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    • முத்து நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் பாம்பு, நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே முத்துநகரில் வசிக்கும் நகர் வாசிகள் தங்களது சொந்தசெலவிலேயே தெருவிளக்குகளை அமைத்து புதன்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தனர்.

    சீர்காழி நகராட்சி 1-வது வார்டில் முத்துநகர் அமைந்துள்ளது.

    இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு நகராட்சி சார்பில் மின்விளக்குகள் அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தும் மின்விளக்கு அமைத்திட தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இதனால் இரவு நேரங்களில் செல்லும்போது பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும், நாய்கள் தொல்லையாலும் மக்கள் அவதியடைந்தனர்.

    இதனையடுத்து முத்துநகர் சங்க நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி நகர் வாசிகள் இணைந்து ரூ.25ஆயிரம் செலவில் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் 8 மின்விளக்குகளை பொருத்தினர்.

    அதனை பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி முத்து நகர் சங்க தலைவர் அமுதராஜன் தலைமையில் நடந்தது. சங்க செயலாலரும், நகர்மன்ற உறுப்பினருமான முபாரக் அலி மின்விளக்கை ஒளிரசெய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் பிச்சைசாலி முகம்மது, துணை செயாளர் இஸ்மாயில் ஜின்னா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
    • தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்சூர், இடப்பள்ளி, மாவேலிக்கரா மற்றும் கருநாகப்பள்ளி ரெயில் நிலைய எல்லைகளிலும், மாவேலிகரா-செங்கனூர் மற்றும் சாஸ்தான் கோட்டா கருநாகப்பள்ளி பிரிவு களிலும் தண்டவாளம் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ் பிரஸ் அக்டோபர் 18, 21,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவது காயங்குளம் சந்திப்பு மற்றும் ஆலப்புழா வழியாக எர்ணாகுளம் சந் திப்பு செல்லும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் நிறுத்தத்தைத் தவிர்க்கும்.

    அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    ரெயில் எண்:16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படுவது அக்டோபர் 15 முதல் 21 வரை (7 நாட்கள்) கன்னியாகுமரியில் இருந்து காலை 09.40 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக) புறப்படும்.

    ரெயில் எண்:16127 சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 13 முதல் 18 வரை (6 நாட்கள்) வழித்தடத்தில் 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடைமேடை சீரமைக்கும் பணி காரணமாக ராமேசுவரம்-திருப்பதி ரெயில் இன்று தாமதமாக புறப்படும்.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    ராமேசுவரத்தில் ரெயில் நிலைய பராமரிப்பு நடைமேடைகளில் சீரமைப்பு பணி நடக்கிறது. திருப்பதி-ராமேசுவரம் காலிப்பெட்டி, பராமரிப்பிற்காக மதுரை சென்று வர வேண்டி உள்ளது. எனவே ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 4.20 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரெயில், இரவு 9.15 மணிக்கு 295 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கினர்.
    • குடிநீர் கலங்கலாக வருவதை தடுப்பதற்காக கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையப் பகுதியில் ரூ.5 கோடியில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையில் வசித்து வரும் பழங்குடியின சுய உதவிக்குழு பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச கரவை மாடுகள் 70 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு காணிக்கையாக பெறப்பட்ட கால்நடைகள், ஆலய கோசாலை மற்றும் கம்பரசம்பேட்டை கோசாலைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிலிருந்த 122 பசு மாடு மற்றும் கன்றுகளை மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு கம்பரசம்பேட்டை கோசாலையில் இன்று நடந்தது.

    இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கினர்.

    இதன் மூலம் பச்சமலையில் உள்ள தென்புறநாடு, வடநாடு, கோம்பை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குடிநீர் கலங்கலாக வருவதை தடுப்பதற்காக கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையப் பகுதியில் ரூ.5 கோடியில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இது போன்ற எந்திரம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகளை தொடங்கிய நிலையில் மழை வந்துவிட்டது. போக்குவரத்தும் இடையூறாக இருக்கிறது. இதனால் பகலில் சாலைகள் போட இயலவில்லை. இரவில் மட்டுமே சாலைகள் போடும் பணி நடக்கிறது. மழையில் சாலை போட்டால் தார் வீணாகிவிடும். இயற்கையின் சீற்றத்தால் மட்டுமே சாலை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. ஆனால் நடைபெற உள்ள பணிக்கான ஆணைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போக்குவரத்து மற்றும் மின்சாரம் சப்ளையில் அரசு வருமானம் பார்க்க கூடாது. லாபம் ஈட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, சரி ரைட் என மட்டும் பதில் அளித்தார்.

    அதி.மு.க. ஆட்சியிலும் பஸ் கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை மனதில் வைத்து சரி ரைட் என மட்டும் சிரித்தவாறு பதில் அளித்து சென்றதாக அங்கிருந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததால் ஒருசில இடங்களில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததால் ஒருசில இடங்களில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மேலும் சில அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த படிக்க வைத்தும் வருகிறார்கள். அந்த அளவிற்கு அரசு பள்ளியில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஒரு மாத காலமாக பாடப்புத்தகம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் காலாண்டு தேர்வு வர இருப்பதால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து திருச்சி அரசு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பொதுவாக வசதி படைத்தவர்கள் தங்களின் குழந்தைகளை பணம் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். படிக்காத கூலி வேலை ெசய்யும் பாமர மக்கள் மட்டும் தான் அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை அனுப்பும் நிலை இன்னும் ஒரு சில இடங்களில் மாறாமல் தான் உள்ளது.

    அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதமே வழங்க வேண்டிய புத்தகம் இன்னும் பள்ளிகளில் படிக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள் மூலமாகவும், குறிப்புகள் மூலமாகவும் தான் பாடம் கற்பித்து வருகிறார்கள்.

    பாடப்புத்தகம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. காலாண்டு தேர்விற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. கடைசி நேரத்தில் புத்தகத்தை வழங்கினால் மாணவர்கள் எவ்வாறு படித்த நல்ல மதிப்பெண் பெறமுடியும். குறிப்பாக பீமநகர் அரசு பள்ளி, பொன்மலைப்பட்டி அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் எதுவுமே வழங்கப்படாமல் உள்ளது.

    தனியார் பள்ளியில் படிப்பவர்கள் பணம் கொடுத்து தாங்கள் படிக்கும் பாடப்புத்தகங்களை பெற்று கொள்வார்கள். ஆனால் அரசு பள்ளியில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் அதை எப்படி பெற்று கொள்ள முடியும். ஆகவே புத்தகம் வழங்கப்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு விரைந்து புத்தகங்களை வழங்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தகங்கள் இன்னும் சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வரவில்லை. அவைகள் வந்த உடன் விரைவில் புத்தகம் வழங்காமல் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    • தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

    ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

    முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி விரைவு ரெயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால், மாற்று எஞ்சின் பொறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டுள்ளது.
    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை கொல்லத்தில் இருந்து ரெயில் புறப்படும் போது எஞ்சின் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    மாற்று டீசல் எஞ்சின் பொறுத்தப்பட்டு ரெயில் 2 மணி நேரம் தாமதாமாக புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில் 2 மணிநேரம் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×