search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை காரணமாக திருப்பூருக்கு தாமதமாக வரும் ரெயில்கள் - பயணிகள் அவதி
    X

    கோப்புபடம்.

    மழை காரணமாக திருப்பூருக்கு தாமதமாக வரும் ரெயில்கள் - பயணிகள் அவதி

    • திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சென்னை, கேரளா செல்லக்கூடிய ரெயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, கேரளா செல்லக்கூடிய ெரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மங்களூர் சென்ட்ரலில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில் தினமும் காலை 8.08 மணிக்கு திருப்பூருக்கு வந்து 8.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இந்த ெரயில் இன்று 5 மணி நேரம் 30 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.அதன்படி இந்த ெரயில் திருப்பூருக்கு மதியம் 1:30 மணிக்கு வந்து 1:32க்கு புறப்படும்.

    அதேபோன்று திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய சிறப்பு ரெயில் 6 மணி நேரம் 14 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது.அதன்படி திருப்பூருக்கு பிற்பகல் 3.57 மணிக்கு வந்து 3.59 மணிக்கு புறப்படும். கோர்பாவில் இருந்து கொச்சுவேலி வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.43 மணிக்கு வந்து 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 10 மணி நேரம் 23 நிமிடங்கள் கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி இந்த ரெயில் மாலை 4.07 மணிக்கு திருப்பூருக்கு வந்து 4.09 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும். இதேபோன்று பல்வேறு ரெயில்கள் இன்று ஒரு மணி நேரம் ,2 மணி நேரம் தாமதமாகவே திருப்பூருக்கு வந்தது. காலை திருப்பதி மற்றும் சென்னை செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரெயில் 50 நிமிடங்கள் தாமதமாக திருப்பூருக்கு வந்தது. இதேபோன்று திருவனந்தபுரம் செல்லக்கூடிய கேரளா எக்ஸ்பிரஸ், சில்சர் - கோவை எக்ஸ்பிரஸ், தன்பா செல்லக்கூடிய ரெயில்களும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கால தாமதமாக வந்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×