search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ணா போராட்டம்"

    • மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் குமார் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தினார்.
    • இதனை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு முன்பு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் குமார் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தினார். இதனை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கார்த்திகேயன், தங்கராஜ், லலித்குமார், சுந்தரம், கிருஷ்ணசாமி பிரசாத், சிவா, பெருமாள், கீதா, விஜயா, மேகலா சங்கீதா, தன்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதேபோல் தேனி க.விலக்கு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மதுரை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். டாக்டர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் அவர்கள் கோஷமிட்டனர்.

    • உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விஸ்வ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ேமடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாநில அமைப்பாளர் சேதுராமன், பொறுப்பாளர் பீமாராவ்ராம் தலைமையில் விஸ்வ இந்துபரிஷத் நிர்வாகிகள் 30 பேர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடைமுறையை ரத்து செய்திட வேண்டும்.
    • கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில்ஏற்று கொண்டவாறு கல்வி கட்டிடங்களை அரசு நிர்ண யிக்கும் அளவில் அனு மதிக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

    இதில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை போல மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

    கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஏற்று கொண்டவாறு கல்வி கட்டிடங்களை அரசு நிர்ண யிக்கும் அளவில் அனுமதிக்க வேண்டும்.

    மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்கிட வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஆணைப்படி கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடைமுறையை ரத்து செய்திட வேண்டும் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்த தர்ணா போராட்டத்தில் மாவட்ட தோழமை சங்கத் தலைவர்கள் அறிவழகன், மாநில துணைத்தலைவர் கரோலின் ராஜ், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் வடிவேல், பொருளாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாககல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் கல்லூரி நிர்வாகத்தின ரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளையம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளை யம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்திற்கு காலி குடத்துடன் சென்றார்.

    தர்ணா

    துக்கியாம்பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்காததை கண்டித்தும், அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒன்றிய குழு தலைவர் சதீஷ்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்தழகன், அண்ணாதுரை ஆகியோர், துக்கியாம்பாளை யம் கிராமத்தில் ஆய்வு செய்து அனைத்து பகுதி களுக்கும், சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு, தர்ணா போராட்ட த்தை ஒன்றிய குழு உறுப்பி னர் உழவன் இரா. முருகன் கைவிட்டு இருக்கையில் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
    • வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17- வது வார்டு கவுன்சிலராக பா.ம.க.,வை சேர்ந்த சுகந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தனியாக வந்த கவுன்சிலர் சுகந்தி, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நின்று கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது:-எனது வார்டில் 450 வீடுகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.

    6 மாதங்களாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், எனது வார்டுக்கு சரிவர வருவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளேன் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் எனது வார்டில் சாக்கடை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இங்குள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனது வார்டில் கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகின்றது. ஒவ்வொரு முறையும் வந்து கூறும் போது செயல் அலுவலர் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கின்றார் .ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இதேபோல் தொடர்ந்தால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சுகந்தி யிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பணிகளையும் செய்து தருவதாக பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள்.
    • ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டு மேலப்பாக்கம் புதூர் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியா வசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர். அப்போது கடை விற்பனையாளர், பொதுமக்களிடம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வாங்கும் போது கூடுதலாக சோப்பு உள்ளிட்ட சில பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தனிப்பிரிவு காவலர் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    • தர்ணாவில் ஈடுபட்டனர்
    • விவசாய குறைதீர்வு கூட்டம் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கும் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் வந்தவாசி நகர்ப்புற பகுதியியான கோட்டை மூலையில் நிழற்குடை அமைப்பதற்காக பல கூட்டங்களில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரி சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் விவசாயிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.அப்போது அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நியர்குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை ெதாடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க வலியுறுத்தல்
    • குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    அப்போது ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த வேண்டாமணி தனது மகனுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை சமரசம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.

    வேண்டாமணி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். எனக்கும், எனது கணவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் தற்போது எனது அம்மா வீட்டில் உள்ளேன்.

    இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த வேறு பெண்ணை 2-து திருமணம் செய்து கொண்டார்.

    எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை அழைத்து விசாரணை செய்து, என்னுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பருவதனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி மன்ற கூட்டங்களை முறையாக நடத்தாததால் வார்டுகளில் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சி மன்றத்தில் ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற கூட்டம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மேற்கொண்ட திட்டப் பணிகளின் வரவு செலவு கணக்குகள், ஆறு மாதத்திற்குப் பின் கூட்டம் நடத்துவதற்கான காரணங்கள் குறித்து மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் முறையாக பதில் அளிக்காததை கண்டித்து துணைத் தலைவர் சுசீலா தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து அலுவலகத்தின் முன்பு தர்னாவில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி மன்ற கூட்டங்களை முறையாக நடத்தாததால் வார்டுகளில் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது. கூட்டம் நடத்தாமலேயே வார்டுகளில் பணிகள் மேற்கொண்டதாக செலவினங்களை காண்பித்து மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    • செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. முக்கிய ரெயில்வே சந்திப்பு, மாவட்ட அரசு தலைைம ஆஸ்பத்திரி, ஏராளமான பள்ளி-கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பழவேலி நீர் ஏற்றும் தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாததை கண்டித்தும் செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரும் 9-வார்டு கவுன்சிலருமான தமிழரசன் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகையுடன் அமர்ந்து இருந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் தமிழரசன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொத்தனூர் பேரூராட்சி கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது.
    • ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சி, கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இப்பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்க ளுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஏற்கனவே வழங்கிய சம்பள தொகை ரூ.14,000-ஐ, தற்போது ரூ.10,000 ஆக குறைத்துள்ளனர். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    நாள்தோறும் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாவும் கூறி இன்று காலை பணிக்குச் செல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, தங்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட சம்பள தொகையை உடனடியாக அதிகரித்து வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். 

    ×