விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் தர்ணா போராட்டம்-கைது

உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் தர்ணா போராட்டம்-கைது
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விஸ்வ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ேமடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாநில அமைப்பாளர் சேதுராமன், பொறுப்பாளர் பீமாராவ்ராம் தலைமையில் விஸ்வ இந்துபரிஷத் நிர்வாகிகள் 30 பேர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com