search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
    X

    தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    தருமபுரியில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

    • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடைமுறையை ரத்து செய்திட வேண்டும்.
    • கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில்ஏற்று கொண்டவாறு கல்வி கட்டிடங்களை அரசு நிர்ண யிக்கும் அளவில் அனு மதிக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

    இதில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை போல மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

    கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஏற்று கொண்டவாறு கல்வி கட்டிடங்களை அரசு நிர்ண யிக்கும் அளவில் அனுமதிக்க வேண்டும்.

    மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்கிட வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஆணைப்படி கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடைமுறையை ரத்து செய்திட வேண்டும் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்த தர்ணா போராட்டத்தில் மாவட்ட தோழமை சங்கத் தலைவர்கள் அறிவழகன், மாநில துணைத்தலைவர் கரோலின் ராஜ், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் வடிவேல், பொருளாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×