search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்"

    • கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.
    • இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடுமுடி:

    வேலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் கொடுமுடி பஸ் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.40-க்கு செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று 9.25 மணிக்கு கொடுமுடி பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் பஸ் நிலையத்தில் ஈரோட்டுக்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த அரசு பஸ் நேரக்காப்பாளர் 9.30-க்கு அரசு பேருந்து உள்ளது. பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று கூறியதற்கு அப்படித்தான் ஏற்றுவேன் என்று தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.

    மேலும் தனியார் பஸ் கண்டக்டர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்ட படித்து வருபவர் என்றும், கல்லூரி விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் கண்டக்டராக பணிக்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பலத்த காயம் அடைந்த முதியவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி என்ற அலிகான் (வயது 58), பத்மனாபபுரம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்.

    இவர் அழகியமண்டபம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செய்யது அலி என்ற அலிகான் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது மகன் முகம்மது சர்ஜுன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    • கோவில் திருவிழாவிற்கு சென்றபோது துனிகரம்
    • 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்

    கோவை:

    கோவை துடியலூர் ராக்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 44). தனியார் நிறுவன ேமலாளர். இவர் கடந்த 4-ந்தேதி குடும்பத்துடன் பெருமாநல்லூரில் உள்ள மனைவின் வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று அவரது வீட்டின் அருகே உள்ள குனசேகரன் என்பவர் தனசேகரனின் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்தார். இதுகுறித்து அவர் தனசேகரனுக்கு போன் செய்து கூறினார்.இதைகேட்டு அவர் உடனே பெருமாநல்லூரில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்பட 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தனசேகரன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ேமலாளரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோன்று கருமத்தம்பட்டி கனியூரை சேர்ந்தவர் சாந்தகுமார் (47). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் நாகர்கோவில் சென்றார்.அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள லதா என்பவர் சாந்தகுமாக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுகுறித்து சாந்தகுமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சி யில் ஈடுபட்ட திருடர்களை தேடி வருகின்றனர்.

    ×