search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை"

    • திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

    மண்ணச்சநல்லூர்,

    தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்ப டங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. இதே போல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோயில் இணை ஆணையர் கல்யாணி கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை என ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.

    பக்தர்களின் வசதிக்காக செல்போன், வீடியோ சாதனங்கள் வைப்பதற்கு விரைவில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் செல்போன் மற்றும் கேமிரா உள்ளிட்ட, மின் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
    • திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம்.

    மதுரை

    மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    மதுரை செல்லூர் தத்தனேரி ெரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளை யம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பா ளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளை யம் செல்லலாம்.

    கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம், யானைக்கல் சந்திப்பு சிம்மக்கல் ரவுண்டாணா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் - செல்ல லாம்.

    மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு - சிம்மக்கல் ரவுண்டாணா யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி -கோரிப்பா ளையம் சந்திப்பை அடைய லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேசன் பொருட்கள், பெட் ரோல் லாரிகள்) மட்டும் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது - குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ெரயில்வே மேம்பாலம்- புதுநத்தம் சாலை ஆனையூர் அய்யர் பங்களா சந்திப்பு வழியாக வும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்ல லாம்.

    திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம்.

    மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பி லிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று - சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
    • மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையில் இருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

    அதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி ஆய்வாளர் சின்னத்துரை மீஞ்சூர் டிராபிக் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது.
    • அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாள ர்களுக்கு சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரினை திறந்து விட உள்ளோம். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும். இந்த நேரத்தில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றினை கடக்கவும் அனுமதிக்க கூடாது.

    ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
    • திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வலியுறுத்தல்

    கோவை,

    கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஜாஸ்மின் மதியழகன் என்பவர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்து உள்ள புகார் மனுவில், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து, ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இது அவர்களை கேளிக்கை பொருளாகவும், நகைச்சுவைக்காக அவமானப்படுத்துவதாகவும் உள்ளது.

    எனவே இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையெனில் திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
    • உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதி களில் வார சந்தைகளும் நட ந்து வருகிறது.குறிப்பாக தில்லை நகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராம லிங்க நகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையா ம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வார ச்சந்தைகள் நடந்து வருகிறது.இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வார சந்தைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.இது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி யாக இருந்ததால் பொதும க்களிடையே வரவேற்பும் அதிகமாக இருந்தது.இந்த வார சந்தைகளால் அந்தப் பகுதிகளில் நிரந்தர மாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இத னால் வார சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவி த்து வந்தனர்இந்த நிலையில் தற்போது மாநகரப் பகுதிகளில் குடியி ருப்பு மற்றும் சாலைகளில் வாரச் சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் ந டத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர்.ஆனால் வார சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இது போன்ற வாரச் சந்தைகள் சாலைகளில் நடத்தப்ப டுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாந கராட்சிக்கு கூடுதல் பணி ஏற்படுகிறது.ஆகவே புதிய பகுதிகள், மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளுக்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.அதேசமயம் விவசாயிகள் வியாபாரிகள் வழக்கம் போல் வாகனங்கள் மூல மும், வழக்கமான மார்க்கெட் பகுதிகளிலும் வியாபாரம் செய்ய எந்த தடையும் விதி க்கப்படவில்லை என்றனர்.

    • ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை.
    • சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.

    சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.

    இங்கு, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

    இதன் எதிரொலியால், சென்னையில் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு
    • கூட்டஅரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டம்

    கோவை,

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா நேற்று தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 47-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் பேசும்போது மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்குவதாக தீர்மானம் நிறைவே ற்றப்பட்டு உள்ளது. இது அதிகம் எனவே இந்த தீர்மானத்தை நிறுத்து வைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்கினீர்களோ அதே தொகை தான் இப்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

    ஆனால் அதி.மு.க. கவுன்சிலர் பிரகாகரன் மேயர் பதிலை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்யும் நோக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

    இதனையடுத்து மேயர் கல்பனா அவையை நடத்த விடாமல் இடையூறு செய்தாக கூறி அடுத்து நடைபெற உள்ள 3 மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், கூட்ட அரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகையை ஏந்தி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்து வரும் வீரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

    காங்கயம்:

    முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பலன்களை ஆய்வு செய்ய நிவுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கடுமையான தடையை அமல்படுத்தியதன் மூலம் கேரள மாநிலத்தின் மீன்வரத்து கடந்த நிதியாண்டில் 6.9லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    ஆகவே மீன்படி தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து 58 வகை மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.   

    • 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி புகையிலை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்"

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், குமாரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கொட்டாரம் பகுதியில்உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

    ×