search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிக்க"

    • பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

    காங்கயம்:

    முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கினார்.

    கன்னியாகுமாரி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதபள்ளி மடத்துவிளையைச் சேர்ந்த வர் தங்கமணி. இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பபாய் (60).

    இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், உள்ளனர். இரண்டு பெண் களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் புஷ்ப பாய் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். துணியை துவைத்து கரையில் வைத்து விட்டு ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இழுத் துச்சென்று நீரில் மூழ்கி யுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் திருவட்டார் போலீசுக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து புஷ்பபாயை மாலை 6 மணி வரை தேடினார்கள். பின்னர் இருட்டி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

    இந்நிலையில் மலை யோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பா றை அணையிலிருந்து தொடர்ந்து 800 கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டி ருப்பதையடுத்து மாயமான புஷ்பபாயை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாக காலையில் இருந்தே புஷ்பபாயை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறுகட்டி அந்த பகுதி முழுவதும் தேடி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலையை ஒட்டி முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது.
    • பாதுகாப்பு கருதி, ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்யவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலையை ஒட்டி முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலாத் தலமாக பராமரித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் முட்டல் ஏரியில் படகு சவாரி செய்வதும், நீர் வீழ்ச்சியில் குளித்து செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி, ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்யவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். 

    • இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
    • இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் 5-ந் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தினமும் தடுப்பணையில் தண்ணீர் அதிமாக கொட்டி யதால் தொடர்ந்து பொது மக்கள் அணைக்கு செல்ல கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினமும் பொது மக்கள் வந்து ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறை ந்தது.

    இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனால் இன்று காலை குறைந்த அளவே பொது மக்கள் வந்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். அவர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.

    • கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது.
    • இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, நாமக்கல், சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது. இதனால் கொல்லிமலை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தால், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.

    இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி வனச்சர கர் சுப்பராயன் கூறுகையில், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் 200 அடி உயரத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தடை மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றார்.

    ×