search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி கைது"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்தார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார். அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் நீங்கள் (கவர்னர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் நேற்றிரவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை இன்று கேட்டறிந்தார்.

    செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதித்து கையெழுத்து போடலாமா? என்பது பற்றி முடிவு செய்து இன்று அறிவிக்க உள்ளார்.

    இந்த நிலையில் கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுக்கும் பட்சத்தில் நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் இலாகா மாற்றத்துக்கு தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    அவ்வாறு அரசாணை வெளியிடும் பட்சத்தில் அதை வைத்து அதிகாரிகள் துறைரீதியாக முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதுவுமே தெரியாமல், யாரோ எழுதி கொடுத்ததை வைத்து பேசுகின்ற முதலமைச்சர்தான் இன்றைய முதலமைச்சர்.
    • முதலமைச்சருக்கு உண்மையிலேயே தில், திராணி இருந்தால் வழக்கை சந்திக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை ஊழல் குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் அ.தி.மு.க. பற்றியும், என்னைப் பற்றியும், சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

    அதுகுறித்து மக்களுக்கு முழு உண்மையை சரியான முறையில் தெரிவிப்பது எனது கடமை. அதனால் இந்த கருத்துக்களை நான் தெரிவிக்கின்றேன்.

    சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜியின் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு அமலாக்கத் துறை, செந்தில்பாலாஜி வழக்கு குறித்து விசாரிக்கலாம். அதற்கு தடையில்லை. அதோடு 2 மாதத்தில் இந்த வழக்கை நடத்தி முடிக்க வேண்டும்.

    அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதோடு அந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டே சிறப்பு குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்படும் என்ற தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

    அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி வீடுகள், மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தியது. அதோடு அவரும் விசாரிக்கப்பட்டார். நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கின்றபோது, "நான் அமலாக்கத்துறைக்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன்" என்று தெரிவித்தார்.

    ஆனால் அவ்வாறு அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ஏற்கனவே இந்த வழக்கு குறித்து பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அதற்கு செந்தில்பாலாஜி உரிய முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆஜராகவில்லை. இருப்பினும் அமலாக்கத்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த விசாரணையை முடித்தாக வேண்டும் என்ற நிலையின் காரணமாக இந்த சோதனை நடைபெற்றது. அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

    அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பரிந்து பேசுகிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் வலைதளத்தில் பேசியபோது பதற்றத்தோடு பேசுகின்ற காட்சியை நான் பார்த்தேன். இந்த பதற்றத்துக்கு என்ன காரணம்?

    அ.தி.மு.க. ஆட்சிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி வந்தது. எதற்காக உங்களுக்கு ஆட்சியை கொடுத்தார்கள்? நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் உங்களுக்கு இந்த ஆட்சியை தந்தார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. மக்களுக்கு என்ன திட்டம் தேவை என்பதையும் சிந்திக்கவில்லை.

    இன்றைய தினம் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தவுடன் இவ்வளவு பதற்றம் எதற்காக? மடியிலே கனம் இருக்கிறது, வழியிலே பயம் இருக்கிறது.

    இன்றைக்கு டாஸ்மாக் என்று எடுத்துக்கொண்டால் சுமார் 6000 மதுபான கடைகள் தமிழகத்தில் இருக்கின்றன. அதில் 5,600 பார்கள் இருக்கின்றன. அதில் சுமார் 3,500 பார்களுக்கு டெண்டரே விடவில்லை. சுமார் 2 ஆண்டு காலமாக இந்த முறைகேடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாரை கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது காவல் துறையின் கடமை.

    ஆனால் காவல் துறை இன்று தி.மு.க.வின் ஏவல் துறையாக மாறி விட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் அருந்தியவர்கள் 23 பேர் இறந்து விட்டார்கள். சேலத்தில் மட்டும் 27 பார்கள் முறைகேடாக நடைபெற்றது என்று சீல் வைக்கிறார்கள்.

    திருவள்ளூரில் 72 பார்கள் முறைகேடாக நடைபெற்றதாக சீல் வைக்கிறார்கள். அதுவரை இந்த அரசுக்கு தெரியாதா? காவல் துறைக்கு தெரியாதா? 2 ஆண்டு காலம் முறைகேடாக பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இதுபோல் தமிழகம் முழுவதும் 3,500 கடைகளுக்கு மேலாக முறைகேடாக பார் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் இந்த 2 ஆண்டு காலத்தில் எந்த துறையையும் கவனிக்கவில்லை. எல்லா துறையிலும் வளர்ச்சி என்று சொல்கிறார். வளர்ச்சி எதிலே இருக்கிறது என்று சொன்னால் ஊழலில்தான் வளர்ச்சியாக இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஊழல்தான் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

    எதுவுமே தெரியாமல், யாரோ எழுதி கொடுத்ததை வைத்து பேசுகின்ற முதலமைச்சர்தான் இன்றைய முதலமைச்சர். அவர் என்னைப்பற்றி சில கருத்துக்களை நேற்று வலைதளங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் மீது ஒரு குற்றம் சுமத்த வேண்டும் என்று சொன்னால் அதை முழுமையாக தெரிந்து கொண்டு சொன்னால் பரவாயில்லை.

    ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோது, தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என் மீது நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஐகோர்ட்டு நீதிபதி லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். இதை விசாரித்து அந்த விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையும் விசாரித்து அந்த விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட சீல் உறையில் ஐகோர்ட்டில் கொடுத்தார்கள்.

    ஆனால் ஐகோர்ட்டு நீதிபதி அதை பிரித்து படிக்காமல் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். உடனே நான் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அதற்கு தடை வாங்கினேன். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தடையாணையை நீக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கொடுத்தது. மீண்டும் ஐகோர்ட்டில் அந்த வழக்கை நடத்த வேண்டும். அதுவும் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை சீலிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

    அந்த தீர்ப்பின்படி ஐகோர்ட்டில் வழக்கு வந்தது. அந்த வழக்கு நடைபெற ஆரம்பித்தது. அப்போது மு.க.ஸ்டாலின் மூலமாக என் மீது ஒரு பொய்யான ஊழல் வழக்கை தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி அவரே முன்வந்து இந்த வழக்கை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.

    நான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறேன் என்று கோர்ட்டில் சொன்னேன். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, அதுதான் அ.தி.மு.க.

    முதலமைச்சருக்கு உண்மையிலேயே தில், திராணி இருந்தால் இந்த வழக்கை சந்திக்க வேண்டும். துணிச்சலுடன் சந்திக்க வேண்டும். நாங்கள் சந்திக்கிறோம் அல்லவா? அதைப் போல செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்து உள்ள வழக்கை நேர்மையான முறையில் சந்தித்து வாதாடி கோர்ட்டில் நாங்கள் நிரபராதி என்று வெளியே வாருங்கள். அதைவிட்டு விட்டு ஏதேதோ பேசி மக்களை குழப்பி செந்தில் பாலாஜி ஒரு நல்லவர் என்ற தோற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க பார்க்கிறார்.

    இதே செந்தில்பாலாஜி பற்றி மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கரூர் பொதுக்கூட்டத்தில் குற்றம் சுமத்தி பேசினார். அப்படி இருக்கும்போது இன்றைக்கு செந்தில் பாலாஜி எப்படி நல்லவர் ஆனார்.

    ஆனால் நாங்கள் அப்படியில்லை. கோர்ட்டில் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதாடினோம். அந்த வழக்கை சந்தித்த கட்சி எங்கள் கட்சி.

    அ.தி.மு.க.வை இனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீண்டி பார்க்கக்கூடாது. இந்த ஊழலுக்கு அவருடைய கூட்டணி கட்சிகள் துணை போக வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இன்று கூட்டணியில் இருப்பீர்கள். நாளைக்கு வெளியில் வந்து விடுவீர்கள். மக்களுக்கு எப்படி பதில் சொல்வீர்கள்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியின் அடிமை என்று சொல்கிறார். அதே பா.ஜனதா கட்சியுடன் 1999-ல் கூட்டணி போட்டு பா.ஜனதா அமைச்சரவையில் தி.மு.க. எம்.பி.க்கள் அமைச்சர்களாக இடம் பெற்றார்கள். எனவே காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் யாரும், எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் அல்ல. சொந்த காலில் நினைக்கின்றவர்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக, உரிமைக்காக பாடுபடுகின்றவர்கள். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. நாட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். அது மட்டுமல்ல.

    சோதனை நடத்த வந்த வருமான வரித்துறையினர் பலர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். அப்போதெல்லாம் முதலமைச்சர் வாய் திறக்கவே இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் குலைந் துள்ளது என்பதற்கு இதுவே சான்று.

    எனவே அ.தி.மு.க.வை எந்த காலத்திலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு தொண்டனை கூட நீங்கள் தொட்டு பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கத்தை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள். காற்றோடு காற்றாக கரைந்து போவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர். முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்?

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி. 2 ஆண்டுகளில் ரூ.30,000  கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி.

    நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதான வழக்குகளை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன்.

    நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிய நீங்கள் மக்களை போய் சந்திக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதட்டத்துடன் பேசியதற்கு காரணம் என்ன? வழக்குகளை தி.மு.க.வினர் துணிச்சலோடு சந்திக்க வேண்டும். வழக்கை சந்தித்து குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று முதலமைச்சர் பரிந்துரை.
    • பரிந்துரை குறித்து கவர்னர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று முடிவு.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோர்ட்டு அனுமதியுடன் இப்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் கைது செய்யப்பட்ட தகவலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், சட்டசபை சபாநாயகருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறைப்படி தெரிவித்து விட்டனர்.

    இந்த நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கான பதிவேட்டு எண்.1440 வழங்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.

    அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் நீங்கள் (கவர்னர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் நேற்றிரவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியும் நேற்றிரவு விரிவாக விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை இன்று கேட்கிறார்.

    செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதித்து கையெழுத்து போடலாமா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்க உள்ளார்.

    இதை ஏற்கும்பட்சத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு வீட்டு வசதி வாரியத்துடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பார் என தெரிகிறது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • செந்தில்பாலாஜிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த செலவில் விரும்பும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கோர்ட்டு அனுமதித்தது.

    இந்த நிலையில் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதன் பிறகு தான் ஆபரேசன் செய்ய முடியும். இல்லாவிட்டால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி விடும். எனவே ஆபரேசன் நடைபெற இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்றார்.

    பின்னர் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவ குழு வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு கோர்ட்டில் வக்கீல் இளங்கோ தாராளமாக எய்ம்ஸ் மருத்துவ குழு வந்து பரிசோதித்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தாராளமாக அவர்களும் வந்து பரிசோதிக்கட்டும் என்றார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மூத்த டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான எங்கள் நிபுணர்கள் குழு அவரை பரிசோதித்தது.

    ஆரம்ப கால 'கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராப்ட்' அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் மயக்க மருந்துக்கான உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்படும்.

    தற்போது இதய கண்காணிப்புடன் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    • பலத்த பாதுகாப்புடன் அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை தொடர்ந்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புழல் சிறை நிர்வாகம் அனுப்பியது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.

    காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
    • நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல என அமலாக்கத்துறை வாதம்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜிரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை பின்பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா, இல்லையா? என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. மேலும், தமிழக மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினர். அத்துடன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆராயலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அவரை கைது செய்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
    • பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா? இல்லை? என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.

    மேலும், தமிழக மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு வாதம் நடைபெற்றது. 

    • கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது.
    • கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில், கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை செய்துள்ளனர்.

    இவ்வாறு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    • பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது.
    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை.

    பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும்-உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

    செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?

    அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்! இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.

    எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க.வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பா.ஜ.க.வை நம்புவார்கள். பா.ஜ.க.வின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!

    கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.

    * சிவசேனா எதிர்க்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தை கைது செய்ய வேண்டும்.

    * ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? டெல்லி மாநில அமைச்சர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்ய வேண்டும்.

    * ராஷ்ட்ரிய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்ய நடத்த வேண்டும்!

    * மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி பாஜக-வை எதிர்க்கிறார்களா, அவர்களது கட்சிக்காரர்களது இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்!

    * கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரைக் கைது செய்தார்கள். அவர் மக்களைச் சந்தித்து, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது துணை முதலமைச்சராகவே ஆகி விட்டார்!

    * முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தார்கள்.

    * தெலுங்கானாவில் அமைச்சருக்குத் தொடர்புள்ள இடங்களில் ரெய்டு!

    * சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு!

    ஆனா, உத்தரப்பிரதேசத்தில் மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது 'உத்தமபுத்திரன்' பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.

    பா.ஜ.க.வை எதிர்க்கிற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பா.ஜ.க.வோட துணை அமைப்புகள் ரெய்டு நடத்தி விட்டார்கள். அப்படி இல்லை என்றால், அ.தி.மு.க. மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்து விடுவார்கள்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112-தான்.

    ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.

    இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க.-வில் சேர்ந்த பின்னர் 'புனிதர்கள்' ஆகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட 'புனிதர்கள்' மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார்! ஏன் இங்கே இருக்கும் அ.தி.மு.க.வே அதற்கு ஓர் உதாரணம்தான். இந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்பது இதுதான்.

    தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிகையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்து கொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா?

    பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை தி.மு.க.காரர்கள்! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரி தான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான். நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கி றேன்.

    நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். "என்ன யாரும் அடிக்க முடியாது.. ஞாபகம் வெச்சிக்க.. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது…" என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.

    எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு, மேல்-கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்!

    நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்து கிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசி வரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோ பாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை.

    தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ-தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!

    எனவே, பொறுப்புள்ள ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh


    • தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
    • செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது

    கோவை:

    பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

    மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.

    செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது.

    பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×