search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி கைது"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
    • அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.

    இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வாரமே அசோக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் இன்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக அவரது தரப்பில் 2 அலுவலகங்களிலும் விளக்கம் மட்டும் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் வருமானவரித் துறை சார்பிலும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்.
    • செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். அதேநேரத்தில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால், அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்தளிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

    அதற்கான பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிவைத்தார். அதன்படி இலாகா மாறுதலை ஏற்றுக்கொண்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதில், முதல்-அமைச்சரின் பரிந்துரையின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய இலாகாக்கள் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) ஆகிய இலாகாக்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் துறைகளாக ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் ஏற்கனவே கவனித்துவரும் துறைகளுடன் சேர்த்து இவற்றையும் கவனிப்பார்கள்.

    ஆனால் செந்தில் பாலாஜி நேர்மை தவறியதற்காக குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

    அதைத் தொடர்ந்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படுகின்றன. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

    அந்த அரசாணையை நிறைவேற்றும் விதமாக, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் 21-வது அமைச்சர் என்ற செந்தில்பாலாஜியின் மூப்பின் நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    • நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. ஆனால் தி.மு.க தான் அடிமையாக இருக்கிறது.
    • தமிழகத்திற்கு என்று ஒரு அரசியல் நாகரீகம் இருக்கிறது. அதை கடைபிடிக்க வேண்டும்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    கேள்வி : மு.க.ஸ்டாலின் உங்களை பா.ஜ.க. அடிமை என்கிறாரே?

    பதில்: பா.ஜ.க. கட்சியோடு, தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதோடு மத்திய அமைச்சரவையில் தி.மு.க. எம்.பிக்கள் இடம் பெற்றார்கள். ஒவ்வொரு நாளுக்கும், காலத்திற்கு ஏற்றவாறு தங்களது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய ஒரே கட்சி தி.மு.க. தான்.

    கூட்டணி என்பது எல்லா கட்சிகளுமே அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் செயல்படும்.

    அதுபோல் தான் அ.தி.மு.க.விற்கு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையுடன் தான் நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. ஆனால் தி.மு.க தான் அடிமையாக இருக்கிறது.

    எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் பேசுகிறார் நாங்கள் எமர்ஜென்சியின்போது மிசாவை பார்த்தோம் என்கிறார். அப்போது யாருடைய ஆட்சி. காங்கிரசுடைய ஆட்சி. அந்த ஆட்சியின்போது தான் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டு தி.மு.க, காங்கிரஸ்சுக்கு அடிமையாக இருக்கின்றது.

    கேள்வி: வருகிற பாராளுமன்றத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பு பற்றி?

    பதில் : அ.தி.மு.க. பொறுத்தவரை வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம் உள்பட 40 இடங்களில் வெற்றி பெற பாடுபடுகிறோம். நாங்கள் வெற்றி பெறும் சூழல் பிரகாசமாக உள்ளது.

    கே: செந்தில் பாலாஜி விஷயத்தில் மு.க.ஸ்டாலின், தனது நிலைபாடு மாற்றுவாறா?

    ப: ஊழல் புரிந்த ஒரு அமைச்சரை தொடர்ந்து அமைச்சராக வைத்திருக்கிறார். கடந்த காலங்களில் ஆலடி அருணா ஒரு வழக்கில் சிக்கியதை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி தமிழகத்திற்கு என்று ஒரு அரசியல் நாகரீகம் இருக்கிறது. அதை கடைபிடிக்க வேண்டும்.

    ஒரு கைது செய்யப்பட்ட அமைச்சர் சிறை கைதியாக இருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தால் எப்படி சரியாக இருக்கும். மக்கள் எப்படி அரசியல்வாதிகளை மதிப்பார்கள். உண்மையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி, அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜிைய விடுவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    கே: நடிகர் விஜயின் அரசியல் கருத்து பற்றி?

    ப: எல்லாருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு. இது ஜனநாயக நாடு. அதன்படி அவருடைய கருத்தை அவர் தெரிவித்து இருக்கின்றார்.

    இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு செந்தில் பாலாஜியின் உடல் முழு தகுதியுடன் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் சட்ட விரோதமாக பணபரி மாற்றம் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு இருதய ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை மேற் கொள்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழவினர் செந்தில்பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்துள்ளனர்.

    இதன் முடிவுகளில் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு செந்தில் பாலாஜியின் உடல் முழு தகுதியுடன் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதையடுத்து அடுத்த 3 நாட்களில் செந்தில்பாலாஜிக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் இருதய ஆபரேசனுக்கு தேவையான இறுதிக்கட்ட உடல் பரிசோதனைகளை செந்தில்பாலாஜிக்கு மேற் கொள்ள டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    வருகிற புதன்கிழமை செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் தொடர்ச்சியாக சில நாட்கள் வரையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படவே வாய்ப்புள்ளது.

    செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து உள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அவரிடம் முதல்நாள் விசாரணையை தொடங்கி விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறையினர் நேற்று காலை 10 மணிக்கே வந்து விடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முழுவதுமே அமலாக்கத்துறையினர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வரவில்லை.

    செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறையினருக்கு நேற்று முன்தினம் (16-ந்தேதி) மாலையில் அனுமதி கிடைத்தது. இதன் மூலம் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை காவலில் இன்று 3-வது நாளாக உள்ளார்.

    வருகிற 21-ந்தேதி ஆபரேசன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்த 2 நாட்களில் (23-ந்தேதி) அமலாக்கத்துறை காவல் முடிவடைகிறது. இதனால் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது எப்போது? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    8 நாள் காவலில் செந்தில்பாலாஜியிடம் சரியாக விசாரணை நடத்த முடியாமல் போனால் அதையே காரணமாக கூறி மேலும் சில நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சில நாட்கள் கழித்து அவரை மீண்டும் காவலில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அமலாக்கத்துறையினர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக இ.எஸ்.ஐ. மருத்துவக்குழு மற்றும் ஜிப்மர் மருத்துவ குழு, எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் மருத்துவ அறிக்கையை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வழக்கின் விசாரணை அதிகாரியான கார்த்திக் தாசரி இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்குகிறார்.
    • போக்குவரத்து கழக வேலை மோசடி, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தார்.

    அடுத்த வாரம் 23-ந் தேதி மாலை 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மத்திய போலீஸ் படையினர் காவேரி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை நேற்று மாலையில் இருந்தே ஏற்றுக்கொண்டனர். மருத்துவமனை நுழைவுவாயில் மற்றும் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியின் 7-வது மாடி ஆகியவை மத்திய பாதுகாப்பு படையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இதைதொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கார்த்திக் தாசரி இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்குகிறார்.

    கடந்த 13-ந்தேதி 18 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தி செந்தில்பாலாஜியிடம் இருந்து பல்வேறு தகவல்களை திரட்டிய அமலாக்கத்துறை குழுவினர் இன்று போக்குவரத்து கழக வேலை மோசடி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்க திட்டமிட்டிருந்தனர்.

    இதன்படி அமலாக்கத்துறை துணை இயக்குனரான கார்த்திக் தாசரி நடத்த உள்ள இந்த விசாரணையின்போது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில்பாலாஜி அளிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையே தலைமை செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

    அந்த ஆவணங்களில் என்ன உள்ளது என்பதை அமலாக்கத்துறையினர் இதுவரை தெரிவிக்கவில்லை. அது தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே அனுராதா ரமேஷ் என்கிற பெண் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில்பாலாஜியின் உறவினர் ஒருவரது பெயரில் ரூ.10.9 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    • செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
    • அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து காவேரி ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

    கரூர்:

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இல்லங்கள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி விசாரணை நடத்தினர். இறுதியில் அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கெண்டு வந்த காரில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு அடுத்தகட்டமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.

    அந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் கோர்ட்டை நாடி இருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.

    மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்கபிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே செந்தில் பாலாஜி தொடர்பான பல இடங்களில் ரெய்டு நடந்து கொண்டுதான் இருந்தது.
    • அமலாக்கத்துறை மட்டுமே செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தும்.

    பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான எச்.ராஜா கூறியதாவது:-

    அமித் ஷாவின் தூண்டுதலால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்ததாக சொல்வது அபத்தமானது. அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே செந்தில் பாலாஜி தொடர்பான பல இடங்களில் ரெய்டு நடந்து கொண்டுதான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    அதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர்ந்து ரெய்டு நடந்திருக்கலாம். தற்போதைய சூழலில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் பாதுகாப்பானது. என்னை பொறுத்தவரை தற்போதைய சூழலில் தி.மு.க.வினரிடம் அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை. அமலாக்கத்துறை மட்டுமே செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தும். அதன் மூலம் பல உண்மைகளும் வெளிவரும்.

    • அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் கையெழுத்து வாங்கினர்.
    • செந்தில் பாலாஜி நேற்று சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைதாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் இன்று கையெழுத்து வாங்கினர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக கையெழுத்தை பெற்றனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி, இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், செந்தில் பாலாஜியை வரும் 23-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம், மருத்துவமனையில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை நடத்த வேண்டும் என நீதிபதி கூறினார்.

    இந்நிலையில், விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும், வற்புறுத்தலும் அளிக்கக்கூடாது என முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறுகையில், விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும், வற்புறுத்தலும் அளிக்கக் கூடாது. காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது. விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு மூன்றாம் நிலை முறையை பயன்படுத்தக் கூடாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறுமின்றி விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் உடல் தகுதி குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பிறகு விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு தேவையான பாதுகாப்பை அமலாக்கத்துறை வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

    • காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என காணாலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி தகவல்.
    • மருத்துவமனையில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை நடத்த வேண்டும்.
    அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி, " இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.

    அதேசமயம், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் மருத்துவமனையில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

    • எடுத்தோம், கழித்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல.
    • செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி முதல்வர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம். இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உண்டு.

    கடந்த 2010ம் ஆண்டு அமித்ஷா சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.

    எடுத்தோம், கழித்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல.

    அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்தார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார். அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்தார். அதில் கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது எனவும், அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும், அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    முதலமைச்சரின் இந்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்த ஆளுநர் இன்று மாலையில் தனது முடிவை அறிவித்தார். அதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

    செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது. குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதால் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

    ×