search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி ஆர்என் ரவி"

    • காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என காணாலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி தகவல்.
    • மருத்துவமனையில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை நடத்த வேண்டும்.
    அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி, " இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.

    அதேசமயம், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் மருத்துவமனையில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

    • எடுத்தோம், கழித்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல.
    • செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி முதல்வர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம். இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உண்டு.

    கடந்த 2010ம் ஆண்டு அமித்ஷா சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.

    எடுத்தோம், கழித்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல.

    அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×