search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி கரூர் கோவிலில் தி.மு.க.வினர் மொட்டையடித்து அங்கபிரதட்சணம்
    X

    கோவிலில் தி.மு.க.வினர் மொட்டையடித்த போது எடுத்தப்படம்

    செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி கரூர் கோவிலில் தி.மு.க.வினர் மொட்டையடித்து அங்கபிரதட்சணம்

    • செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
    • அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து காவேரி ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

    கரூர்:

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இல்லங்கள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி விசாரணை நடத்தினர். இறுதியில் அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கெண்டு வந்த காரில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு அடுத்தகட்டமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.

    அந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் கோர்ட்டை நாடி இருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.

    மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்கபிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    Next Story
    ×