search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைப்பு"

    • கரைகள் பலப்படுத்தப்பட்டது
    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 12 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 12 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில் அழகிய பாண்டியபுரம் பேரூராட்சியில் கீரன் குளத்தை புதுப்பிக்க ரூ.1 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். 6 மாத காலத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிலையில் 1 மாத காலத்திற்கு முன்னதாக 5 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக சேறும், சகதிகள் நிரம்பியும், புதர்கள் மண்டி இந்த குளம் காணப்பட்டது. தற்பொழுது சீரமைப்பு பணிகள் முடிவடைந்து புது பொதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த குளத்தின் கரைப்பகுதிகள் ஏற்கனவே சேதம் அடைந்து காணப்பட்டன.

    தற்போது கரைப்பகு தியில் அனைத்தும் சீரமைக்கப்பட்டு புத்தம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்தை நம்பி 500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.

    தற்பொழுது குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு 10 அடி அகலம் 12 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதால் குளத்தின் நிலை மாறாது இருப்பதுடன் மழைக்காலத்தில் கரை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் வராத வகையில் தடுப்பு சுவர்கள் ஆர்.சி.சி. முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் குளத்திற்கு எவ்வளவு தண்ணீர் வந்தாலும் நீர்க்கசிவு ஏற்படாது. சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்ட மும் பாதுகாக்கப்படும். கோடை காலங்களில் தண்ணீர் வற்றாத வகையில் குளத்தின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு கழிவுநீர் வந்து மாசுபட்ட நிலையில் தற்போது அதுவும் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கான கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, திடல் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும்.

    குளத்தின் கரையை பல ப்படுத்த சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பனை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. மேலும் கொன்றை, வேம்பு போன்ற நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. குளத்தின் கரையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 20 அடி அகலம் வரை உள்ளதால் காலை, மாலையில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதி பொதுமக்களிடம் இது மிக உயர்ந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் இந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாலையோரமாக கழிவுநீர் செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
    • ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில், சாலையோரமாக கழிவுநீர் செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக அந்த கழிவு நீர் பாதையை அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மீண்டும் கழிவு நீர் செல்வதற்கு பாதை அமைக்க சென்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்ப டுகிறது. இதைய டுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார், வார்டு உறுப்பினர் முத்துக்கு மாரசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்ன ர்பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவு நீர் பாதை மீண்டும் அமைக்க ப்பட்டது. இதையடுத்து கழிவு நீர் முறையாக சென்றதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ரூ.99¾ கோடி மதிப்பில் பிரதான கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி ஊராட்சியில் நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநில ஆற்றுப்பகுதி சீர மைக்கப்பட்டுள்ளது. இதனை அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிவ கங்கை மாவட்ட உப வடிநில ஆற்றுப்பகுதிகளை சீர மைத்து பாசன பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ரூ99.75கோடி மதிப்பீட்டில் 59 கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் 5521.66 ஹெக்டேர் பரப்பளவு பாசனவசதி பெற்று பயன் பெற்றுள்ளார்கள்.தற்பொது வைகையாற்றில் உள்ள பார்த்திபனூர் வரும் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாயின் மீதான 45 கி.மீ தூரம் மராமத்து பணிகள் மேல் மற்றும் கீழ் நாட்டார் கால்வாய் சீரமைத்தல் மற்றும் 48 தலைமதகுகளும், 13 குறுக்கு நீரொழுங்கிகள், 3 பாலங்கள், 6 கட்டுமானம் பணிகள் என ரூ53.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 12639.00 ஹெக்டேர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தியாக வினோத பெருமாள் கோவில் சுமார் 800 முதல் 1100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.
    • பழைய கோவில்களை புதுப்பிப்பது போலவே செப்பு கம்பிகள் பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மேடவாக்கம் அருகே மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலையில் உள்ள பொன்மார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத தியாக வினோத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

    இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது கோவிலை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன.

    பழைய கோவில்களை புதுப்பிப்பது போலவே செப்பு கம்பிகள் பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த கோவில் 60 அடி நீளம், 35 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. கோவில் விமானம் உள்ள பகுதி மட்டும் 22 அடி நீளம், 14 அடி அகலத்தில் உள்ளது. ஐந்தரை அடியில் பெருமாள் சிலையும், ஐந்தேகால் அடி யில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த கோவிலின் எதிரே கருடன் சன்னதி உள்ளது. கோவில் விமானத்தில் பெருமாளின் அவதாரங்கள் உள்பட 108 சிலைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்த கோவிலின் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்து மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

    தியாக வினோத பெருமாள் கோவில் சுமார் 800 முதல் 1100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பொன்மார் கிராமம் ஒரு காலத்தில் தியாக வினோதநல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் பெயரிலேயே இந்த ஊர் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஊரில் உள்ள ஒருவர் தனது கனவில் கோவில் தோன்றியதாக கூறினார். இதையடுத்து இந்த கோவில் பற்றிய தகவல்களை ஊர் மக்கள் திரட்டினர். இந்த கோவிலில் சிலைகள் எதுவும் இல்லை. இங்குள்ள கருடன் உருவத்தை வைத்து இது பெருமாள் கோவிலாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அங்கு கிடைத்த வரலாற்று குறிப்புகளையும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூறிய தகவல்களையும் வைத்து தியாக வினோத பெருமாள் கோவில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் பெருமாள் பிரயோக சக்கரத்துடன் அருள்பாலிக்க உள்ளார். வழக்கமாக பெருமாள் கோவிலில் இருக்கும் சக்கரத்தை போல் இல்லாமல் இது நேராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • குளத்தை சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோயில்பத்து 9 -வது வார்டில் தாடளான் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள குளத்தை கலைஞர் நகர்புற

    மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குளத்தை சீரமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

    குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடைக்காகுழி ஊராட்சியில் உள்ள பெருங்குளம் - தச்சக்காணி செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெருங்குளம் - தச்சக்காணி செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பெருங்குளம்-தச்சக்காணி சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், அடைக்காகுழி ஊராட்சி தலைவர் ஜெயராணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், அடைக்காகுழி ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜினோ, சுனில் குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்

    • பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஹிர் வேண்டுகோளை ஏற்று, நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை சார்பில் ரூ.15,000 மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து முடித்தனர்.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
    • கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் சிப்பாய் தெருவில் வடிகால் வாய்க்கால் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதன் கார ணமாக கால்வாயில் சரியான முறையில் கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாந கராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கழிவுநீர் கால்வாய் உடனடி யாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் அப்பகுதியில் சாலையோரமாக வசித்து வரும் மக்கள் துணை மேயர் தாமரைச்செ ல்வனிடம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு கோரிக்கை வைத்தனர். இது தொட ர்பாக அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது வி.சி.க நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் சம்பத், பிரேம், துரை, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்ததையொட்டி 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதில் பொதிகை படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு பொதிகை படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்தபிறகு பொதிகை படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோடைவிடுமுறை சீசனையொட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும்.

    • முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது
    • பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகரிடம் தெரிவித்தனர். பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    நகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகர் முன்னிலையில் வைரம், கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. இவர்களது பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

    மாசிக்கொடையை முன்னிட்டு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாவட்ட பக்தர்களும் திரளாக மண்டைக்காடு வந்து செல்வர். பக்தர்கள் நீராட மற்றும் புனித கால் நனைப்பதற்கு கோவிலின் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் பரம்பை இரணியல் கால்வாய் வழியாக பாய்ச்சப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.

    அணை நீர் இரணியல், நெய்யூர், ஆத்திவிளை, பொட்டல்குழி, காஞ்சிர விளை, தலக்குளம், புதுவிளை, திங்கள்நகர், செட்டியார்மடம், கல்லுக் கூட்டம், லட்சுமிபுரம், கருமங்கூடல் ஆகிய சானல் வழியாக மண்டைக்காடு செல்வதால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களும் பயன் பெறுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் அருகே நெய்யூர் பரம்பை என்னுமிடத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக இரணியல் கால்வாய் துண்டிக்கப்பட்டது.தண்டவாளத்தின் குறுக்கே தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு அணை நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. தொட்டியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை துரிதமாக சீரமைக்க வேண்டும்.

    மண்டைக்காடு பக வதியம்மன் கோவில் கொடியேற்று விழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீர் தேக்க வேண்டும்.அதனால் பரம்பை இரணியல் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுவது அவசியமாகிறது. தெப்பக்குளத்தில் நீரை தேக்கினால்தான் மண்டைக்காட் டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.பரம்பை இரணியல் கால்வாயை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மேற்படி கால்வாயில் ராட்சத குழாய் பதித்து மண்டைக்காடு தெப்பக்குளத்திற்கு நீர் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • படகு அணையும் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை 2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்கீடு
    • கூடுதலாக 3 தூண்டில் வளைவுகள் அமைத்திடவும், கடலரிப்பு தடுப்பு சுவர் ஏற்படுத்தி கடலரிப்பிலிருந்து மீனவ மக்களை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் கீழ் குறிப்பிட்டுள்ள பணிகளை செயல்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.

    அதில், இரையுமன்துறை கிராமம் (மேற்கு பகுதி) மீன் இறங்குதளம் அமைக்கும் பணி மற்றும் தேங்காப்பட்ட ணம் மீன்பிடித் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் தாழ்நிலை படகு அணையும் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை 2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகளை மேற்கொண்டு இரையுமன்துறை மீனவ கிராம மக்கள் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளத்தை மேம்ப டுத்தும் பணியையும் 2023-–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தூத்தூர் மீனவ கிரா மத்தை கடலரிப்பிலி ருந்து பாதுகாக்க வட்ட விளாகத்திற்கும், கோவில் வளாகத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் முழுமையாக சேதமடைந்து குறுகலாக உள்ள தூண்டில் வளைவுகளை 150 மீட்டர் நீட்டிப்பு செய்திடவும், மேலும் கூடுதலாக 3 தூண்டில் வளைவுகள் அமைத்திடவும், கடலரிப்பு தடுப்பு சுவர் ஏற்படுத்தி கடலரிப்பிலிருந்து மீனவ மக்களை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக சீரமைப்பு பணியை மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் மீனவ மக்களின் நிலையை கருத்தில் கொண்டு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மிடாலம், இனையம் புத்தன்துறை மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி களையும் விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட் டுள்ளார்.

    அப்போது இரையுமன்துறை பங்கு தந்தை அசிசி ஜாண், பங்கு பேரவை துணைத் தலைவர் விஜயன், பொரு ளாளர் பிரஷ், உறுப்பினர் பிளமின், நிதிக்குழு செய லாளர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

    ×