search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய்கள்"

    • கால்வாய் நடுவிலே மரங்கள், செடிகள் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள நிலையில் உள்ளது.
    • அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீரான நீர் பாதைகள் அமைக்க வேண்டும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளியில் இருந்து எனுசோனை கிராமம் செல்லும் சாலை வழியில் இரண்டு சிறிய பாலங்கள் உள்ளன.

    இந்த பாலங்களில் தியாகரசனப்பளி ஏரியில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீர் மோதுகுளப்பள்ளி, பாளையம், மேல்பாளையம், அழகுபாவி வழியாக இந்த பாலம் வழியாக சென்னப்பள்ளி, சின்னார், முருக்கனப்பள்ளி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

    இந்த உபரி நீர், மழை நீரால் கால்வாய் கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இரப்பதம் பெற்றும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் வசதி பெற்று பல ஆண்டு முன்பு பெற்று வந்தனர்.

    தற்போது கடந்த சில ஆண்டு காலமாக இந்த கால்வாய் தூர்வாரபடாமல் முட்புதர் மண்டி கால்வாய் நடுவிலே மரங்கள், செடிகள் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் தொழிற்சாலையினர் கால்வாய்களை ஆக்கிரமித்து வருவதால் கால்வாய்கள் இருப்பது தெரியாத நிலைஉள்ளது. இந்த நிலமையை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீரான நீர் பாதைகள் அமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணியினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரணியல் இரட்டை பிரிவு கால்வாயினை தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கோதையாறு பாசன திட்டத்தின்கீழ் அமைந்துள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரு கிறது. ரூ.4.80 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் நீளத்தில் அனந்தன்குளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை'அ' கிராமம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.8.50 லட்சம் மதிப்பில் 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆசாரி பள்ளம் கால்வாய்க்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் வட்டம், வேம்பனூர் கிழக்கு, நீண்டகரை அ, மற்றும் கல்குளம் வட்டம் ஆளுர் 'ஆ' கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    ரூ.11.51 லட்சம் மதிப்பில் 5.60 கிலோ மீட்டர் நீளத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை அ, வடிவீஸ்வரம் கிழக்கு கிராமம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 3.60 கிலோ மீட்டர் நீளத்தில் தெங்கம்புதூர் கால்வாய்க்குட்பட்ட மதுசூதனபுரம் கிராமம் ஆகிய இடங்களில் நடை பெற்று வரும் வருடாந்திர பராமரிப்பு பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கால்வாய்களை முறையாக தூர்வாருவதால் கால்வாயின் நீர்ப்போக்கு கொள்ளளவு அதிகரிக்கும். கால்வாயில் வரும் தண்ணீர் இழப்பு ஏற்படாமல் கடை வரம்பு பகுதிகளில் உள்ள பாசன பகுதிகளுக்கு வெள் ளப்பெருக்கு காலங்களில், சென்றடையும் கால்வாய் களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல் லாமல் பாதுகாக்க இயலும். மேலும் இக்கால்வாய்களின் வாயிலாக 2246.61 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வல்சன் போஸ், பணி ஆய்வாளர் மகேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • ரூ.99¾ கோடி மதிப்பில் பிரதான கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி ஊராட்சியில் நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநில ஆற்றுப்பகுதி சீர மைக்கப்பட்டுள்ளது. இதனை அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிவ கங்கை மாவட்ட உப வடிநில ஆற்றுப்பகுதிகளை சீர மைத்து பாசன பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ரூ99.75கோடி மதிப்பீட்டில் 59 கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் 5521.66 ஹெக்டேர் பரப்பளவு பாசனவசதி பெற்று பயன் பெற்றுள்ளார்கள்.தற்பொது வைகையாற்றில் உள்ள பார்த்திபனூர் வரும் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாயின் மீதான 45 கி.மீ தூரம் மராமத்து பணிகள் மேல் மற்றும் கீழ் நாட்டார் கால்வாய் சீரமைத்தல் மற்றும் 48 தலைமதகுகளும், 13 குறுக்கு நீரொழுங்கிகள், 3 பாலங்கள், 6 கட்டுமானம் பணிகள் என ரூ53.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 12639.00 ஹெக்டேர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • ஊட்டி முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்தது.
    • அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

    ஊட்டி

    ஊட்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் ேநரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஊட்டி- அவலாஞ்சி சாலையில் முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி, வேளாண் பொறியியல் துறை சாா்பில் பைகமந்து முதல் பாலாடா வரை கால்வாய் தூா்வாரும் பணி, கல்லக்கொரை கிராமத்தில் அபாயகரமான மரங்களை தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் அகற்றும் பணி, பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட பி.மணியட்டி, துளிதலை சாலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நிவாரண பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக ஆனந்தகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித்தும் பருவ மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தீவிரமாக பணியாற்றி வருகின்றாா்.

    நீலகிரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கால்வாய்கள், ஓடைகள் முன்கூட்டியே தூா்வாரப்பட்டதால், மிகப்பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 283 அபாயகரமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 456 பேரிடா் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. தேவையான அளவு அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் தயாா் நிலையில் வைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றாா்.

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்துவருகிறது. நீா்நிலைகள் முற்றிலும் நிரம்பியுள்ளன.

    தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கூடலூருக்கு வந்துள்ள பேரிடா் மீட்பு படையினா் தொடா்ந்து பல பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா். கூடலூா் ஓவேலி சாலையில் கெவி ப்பாறா பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.

    ×