என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நீலகிரியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் மழை வெள்ளத்தால் பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
  X

  நீலகிரியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் மழை வெள்ளத்தால் பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊட்டி முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்தது.
  • அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

  ஊட்டி

  ஊட்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் ேநரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

  ஊட்டி- அவலாஞ்சி சாலையில் முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி, வேளாண் பொறியியல் துறை சாா்பில் பைகமந்து முதல் பாலாடா வரை கால்வாய் தூா்வாரும் பணி, கல்லக்கொரை கிராமத்தில் அபாயகரமான மரங்களை தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் அகற்றும் பணி, பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட பி.மணியட்டி, துளிதலை சாலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

  பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நிவாரண பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக ஆனந்தகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித்தும் பருவ மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தீவிரமாக பணியாற்றி வருகின்றாா்.

  நீலகிரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கால்வாய்கள், ஓடைகள் முன்கூட்டியே தூா்வாரப்பட்டதால், மிகப்பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

  நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 283 அபாயகரமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 456 பேரிடா் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. தேவையான அளவு அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் தயாா் நிலையில் வைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றாா்.

  நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்துவருகிறது. நீா்நிலைகள் முற்றிலும் நிரம்பியுள்ளன.

  தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கூடலூருக்கு வந்துள்ள பேரிடா் மீட்பு படையினா் தொடா்ந்து பல பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா். கூடலூா் ஓவேலி சாலையில் கெவி ப்பாறா பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.

  Next Story
  ×