search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூர் தொகுதியில் துறைமுக சீரமைப்பு-மீன் இறங்குதளம் பணிகளை முடிக்க வேண்டும் - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    கிள்ளியூர் தொகுதியில் துறைமுக சீரமைப்பு-மீன் இறங்குதளம் பணிகளை முடிக்க வேண்டும் - ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • படகு அணையும் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை 2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்கீடு
    • கூடுதலாக 3 தூண்டில் வளைவுகள் அமைத்திடவும், கடலரிப்பு தடுப்பு சுவர் ஏற்படுத்தி கடலரிப்பிலிருந்து மீனவ மக்களை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் கீழ் குறிப்பிட்டுள்ள பணிகளை செயல்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.

    அதில், இரையுமன்துறை கிராமம் (மேற்கு பகுதி) மீன் இறங்குதளம் அமைக்கும் பணி மற்றும் தேங்காப்பட்ட ணம் மீன்பிடித் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் தாழ்நிலை படகு அணையும் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை 2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகளை மேற்கொண்டு இரையுமன்துறை மீனவ கிராம மக்கள் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளத்தை மேம்ப டுத்தும் பணியையும் 2023-–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தூத்தூர் மீனவ கிரா மத்தை கடலரிப்பிலி ருந்து பாதுகாக்க வட்ட விளாகத்திற்கும், கோவில் வளாகத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் முழுமையாக சேதமடைந்து குறுகலாக உள்ள தூண்டில் வளைவுகளை 150 மீட்டர் நீட்டிப்பு செய்திடவும், மேலும் கூடுதலாக 3 தூண்டில் வளைவுகள் அமைத்திடவும், கடலரிப்பு தடுப்பு சுவர் ஏற்படுத்தி கடலரிப்பிலிருந்து மீனவ மக்களை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக சீரமைப்பு பணியை மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் மீனவ மக்களின் நிலையை கருத்தில் கொண்டு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மிடாலம், இனையம் புத்தன்துறை மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி களையும் விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட் டுள்ளார்.

    அப்போது இரையுமன்துறை பங்கு தந்தை அசிசி ஜாண், பங்கு பேரவை துணைத் தலைவர் விஜயன், பொரு ளாளர் பிரஷ், உறுப்பினர் பிளமின், நிதிக்குழு செய லாளர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×