search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    • பவானி பெண்ணை கொன்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி,

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு அண்ணாமலை யார் வீதியைச் சேர்ந்தவர் சிவகார்த்தி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மேனகா (47). இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் மேனகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ய ப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் மேனகாவை கொன்றது அவரது மகளின் காதலன் தினேஷ் பாலா (22) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, மேனகாவின் மகள் யூ-டியூப் எடிட்டரான தினேஷ் பாலாவை காத லித்து வந்துள்ளார்.

    இரு வீட்டிலும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பா டுகளும் நடந்து வந்தது. இந்நிலையில் மேனகாவின் நடவடிக்கை சரியில்லா ததால் அவரது மகள் தாயை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று மேனகா வீட்டில் இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த தினேஷ் பாலா தனது வருங்கால மாமியா ரிடம் அவரது நடவடிக்கை குறித்து பேசி உள்ளார். அப்போது இருவர் இடை யே தகராறு ஏற்ப ட்டுள்ளது.

    இதில் ஆத்திர மடைந்த மேனகா, தினேஷ் பாலாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தினேஷ் பாலா மேனகாவை கழு த்தை நெரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் தனது காதலியிடம் கூறியுள்ளார். அவரும் கொலையை மறை க்க காதலனுக்கு உதவி செய்துள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் பாலா மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட தினேஷ் பா லா கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

    • சிங்கப்பூரில் சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம்
    • கலையரசன் ஏற்கெனவே 16 வருடங்கள் தண்டனை பெற்றவர்

    சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கம்.

    ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்று அதனை அனுபவித்த பிறகும் மீண்டும் அதே குற்றத்தை ஒருவர் புரிந்தால் அவர் மீது சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

    சிங்கப்பூரில் வசித்த மார்க் கலைவாணன் கலையரசன் (44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 16 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர். 2017-ம் வருடம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    சில நாட்களிலேயே, சிறையிலிருந்து வெளியே வந்த கலையரசன் ஒரு அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண் துணிகளை மடித்துக்கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

    போதையில் இருந்த கலையரசன், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அப்பெண்ணின் கூக்குரலால் பிடிக்கப்பட்ட மார்க், கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர் கொண்டார்.

    இதன்படி, கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என வாதிடப்பட்டு அவருக்கு 18 வருடம் தடுப்பு காவல் சிறை தண்டனை (Preventive Detention) வழங்கப்பட்டது. இத்துடன் சிங்கப்பூரின் தண்டனை சட்டத்தின்படி 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இத்தகைய கடுமையான தண்டனைகள் அவசியம் என அந்நாட்டு அரசாங்கம் பலமுறை கூறி வந்திருக்கிறது.

    • பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்–த–னர்.

    கடத்–தூர்,

    ஈரோடு மாவட்–டம் கோபி அருகே உள்ள நம்பி யூர் பகு–தியை சேர்ந்–த–வர் 23 வயது பெண். இவர் திரும– ண–மாகி கண–வர், குழந்தையு டன் வசித்து வரு–கி–றார். பொல–வ–பா–ளையம் பகுதி யை சேர்ந்–த–வர் முருகேசன் (வயது 55). இவர் கடம்–பூர் மலைப்–ப–குதி குன்–றி–ல் கிராம நிர்–வாக அலுவலராக பணி–யாற்றி வரு–கி–றார்.

    இந்த நிலை–யில் இவரை அந்த பெண் சந்–தித்து தனக்கு வேலை வழங்குமா றும், இதற்–காக உங்–கள் வீட்–டுக்கு வந்து நான் படித்த சான்–றி–தழ்–களை தரு–கி–றேன் என்–றும் ஏற்–க–னவே கூறி–யுள்–ளார். ஆனால் கிராம நிர்–வாக அலு–வ–லர் நீங்–கள் என்–னு–டைய வீட்–டுக்கு வர வேண்–டாம். நானே உங்–கள் வீட்–டுக்கு வந்து சான்–றி–தழ்–களை பெற்–றுக்–கொள்கி றேன் என்று கூறி–யுள்–ளார். இதைத்–தொ–டர்ந்து கிராம நிர்–வாக அலு–வ–லர் சம்பவ த்தன்று அந்த பெண்–ணின் வீட்–டு்க்கு சென்று சான்றித ழ்கள் கேட்டுள்ளார்.

    வீட்டு வாச–லில் நின்றிரு ந்த அந்த பெண் சான்றித ழ்கள் எடுத்துவர உள்ளே சென்–றுள்–ளார். அப்போது அவரை முரு–கேசன் பின்–தொ–டர்ந்து சென்–றுள்–ளார். சற்–றும் எதிர்–பா–ராத வகை யில் அவர் அந்த பெண்ணை பாலி–யல் பலாத்–கா–ரம் செய்ய முயன்–ற–தாக கூறப்–ப–டு–கிறது. இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்–தம் போட்–டுள்–ளார். இதை கேட்டு அக்–கம்–பக்–கத்–தி–னர் அங்கு ஓடி–வந்–துள்–ள–னர். பொது–மக்–கள் வரு–வதை பார்த்–த–தும் கிராம நிர்–வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்–றுள்–ளார். இது குறித்து அந்த பெண் கட த்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் –பே–ரில் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்–த–னர். விசா–ர–ணையில் பெண்ணை கிராம நிர்–வாக அலு–வ–லர் முருகேசன் பாலி–யல் பலாத்–கா–ரம் செய்ய முயன்–றதை ஒப்–புக்–கொண்–டார். அதைத்–தொ–டர்ந்து அவரை போலீ–சார் கைது செய்–தனர். பின்னர் முருகேசனை நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
    • இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் இயங்கி வருகின்றனர். சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பூசாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் 3 தனியார் பேருந்துகளை பொதுமக்கள் பா.ம.க ஒன்றிய செயலாளர் பி.எஸ்கே. செல்வம் தலைமையில் சிறை பிடித்தனர்.

    • டி.என்.பாளையம் அருகே குடும்பத்தகராறில் மாமனார், மைத்துனரை கத்தியால் குத்தியவரை சிறையில் அடைத்தனர்
    • இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்,

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் தமிழக்கொடிக்கும் டி.என்.பாளையத்தை சேர்ந்த பெரியவன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 40) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தாரணி (9) என்ற மகளும், சித்தார்த் (8) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தமிழ்க்கொடி கணவனை பிரிந்து குழந்தை களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தமிழ்க்கொடியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற வெற்றிவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதை ரங்கசாமி மற்றும் அவரது மகன் சந்தோஷ் (36) தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வெற்றி வேல் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ரங்கசாமி யை குத்தி உள்ளார். இதை தடுக்க வந்த சந்தோஷையும் வெற்றி வேல் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த ரங்கசாமி மற்றும் சந்தோசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தி யமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதி த்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து வெற்றி வேலை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • பவானி-சித்தோடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     பவானி,

    பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பவானி பஸ் நிலையம் அருகில் உள்ள காவேரி ஆற்று புதிய பாலம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இரு வரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கரூர் வேலா யுதம்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அகமது என்கிற அம்மானுல்லா (22) மற்றும் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் 15-தேதி இரவு காடையம்பட்டி பிரிவில் வரதநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசமூர்த்தி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

    அதேபோல் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கோவிந்தராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடியதை ஒப்பு கொண்டு உள்ளனர். அகமது என்கிற அம்மானு ல்லா அக்கா நிஷா என்பவரிடம் 08 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு அவர் கோவை பெண்கள் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 17 பவுன் நகைகளை ஊராட்சி கோட்டை மலை அடிவா ரத்தில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்ததை தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று நகைகளை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் பவானி குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் கோபி மாவட்ட சிறைச்சா லையில் அடைத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

    • பண்ருட்டி அருகே மின் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சக்திவேல் குடிபோதையில் தகாத வார்தையால் திட்டி தாக்கியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் ஓடை தெருவில் மின் கம்பிகளுக்கு இடையூராக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின் ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றியுள்ளனர். வெட்டிய மரக்கிளைகள் வீடுகளின் முன்பு கிடந்துள்ளது. அதே தெருவை சேர்ந்த சிறபி சக்திவேல் (38) என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து உள்ளார்.

    இதனையடுத்து தன் வீட்டின் முன்பு இருந்த மரக்கிளைகளை பார்த்து, மின் அலுவலகத்திற்கு போன் செய்து அப்பகுதி மின் ஊழியரை வரவழைத்தார். வயர்மேன் காத்தவராயன் (40) அங்கு வந்தபோது அவரை சக்திவேல் குடிபோதையில் தகாத வார்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த வயர்மேன் காத்தவராயன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்க ப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கணவரை பிரிந்த சந்தியா, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
    • விஜின்குமார் இளம்பெண்ணுடன் தலைமறைவாகி விட்டார்.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் கொடுங் குளத்தைச் சேர்ந்தவர் விஜின் குமார் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா (34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சந்தியா, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் விஜின் குமார், 18 வயது பெண்ணை கடந்த 12-ந் தேதி உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துள்ளார். இது பற்றி தெரியவந்ததும், சந்தியா மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். முதல் மனைவியான தனக்கு தெரியாமல் விஜின்குமார், 2-வது திருமணம் செய்துள்ளதாக குறிப்பிட் டுள்ளார்.

    அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய ராணி, சப்-இன்ஸ்பெக்டர் மீனா குமாரி ஆகியோர் விசாரணை நடத்தி விஜயகுமார், ஈத்த விளையை சேர்ந்த சபை போதகர் பிரின்ஸ், களியலைச் சேர்ந்த சிவகுமார், டிரைவர் சுரேஷ் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் விஜின்குமார் இளம்பெண்ணுடன் தலைமறைவாகி விட்டார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டது. அவர்கள் கேரளா உள்ளிட்ட பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் விஜின்குமார் வேளாங்கண்ணியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் விஜின்குமாரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த இளம் பெண்ணை மீட்டு நாகர்கோவில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணிடம் திருமால் தகாத முறையில் பேசி, பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அடுத்த படதா சம்பட்டியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த வருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பெண்ணின் உறவினர் கூர்சம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான திருமால் (வயது 48) என்பவர், தனது அண்ணி முறையான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 6.12.2021 அன்று படதாசம்பட்டியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணிடம் திருமால் தகாத முறையில் பேசி, பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து பெண்ணை மீட்டனர்.

    இதில் மனமுடைந்த அந்த பெண் எலி மருந்தை குடித்தார். அவரை உறவி னர்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 12.12.2021 அன்று அப்பெண் இறந்தார்.

    இதுதொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இதையடுத்து விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதன்படி குற்றம்சாட்ட ப்பட்ட தொழிலாளி திருமாலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்கள மேரி ஆஜராகி வாதாடினார்.

    • ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய லாரி டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சிவசாமி (வயது 63). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து தொழுதூர் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரி வருவதற்குள் சிவசாமி சாலையை கடந்து விட்டார்.

    ஆனாலும் லாரியின் டிரைவரான ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் சவுந்திரமோகன் (28) லாரியை நிறுத்தி, கீழே இறங்கி வந்து சிவசாமியிடம், லாரி வருவது உனது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, காலணியால் (செருப்பு) அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவசாமி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திர மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    • சிறுமியின் உறவினரான அன்பழகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கமைான் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அவரது உறவினரான 45 வயது அன்பழகன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாய் வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். பின்னர் புகார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் அன்பழ கனிடம் விசாரணை நடத்தினர். இதில் புகார் உண்மை என்பது தெ ரிய வந்தது.

    இதனை யடுத்து அன்ப ழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    • சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதியில் சின்னசேலம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வீ.கூட்டுரோடு அருகே வேப்பூர் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்குரிய 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ள னர். பின்னர் அவர்களை சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா பிடிபட்டது. 2 வாலிபர்களையும் சின்ன சேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (வயது28) என்பதும், மற்றொரு நபர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சாத்தப்பாடி கிராமம் மடத்தெருவைச் சேர்ந்த அரங்கநாதன் (வயது 28) என்பதும் தெரியவந்தது. பின்பு 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×