search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி-சித்தோடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
    X

    பவானி-சித்தோடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

    • பவானி-சித்தோடு பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பவானி,

    பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பவானி பஸ் நிலையம் அருகில் உள்ள காவேரி ஆற்று புதிய பாலம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இரு வரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கரூர் வேலா யுதம்பாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அகமது என்கிற அம்மானுல்லா (22) மற்றும் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் 15-தேதி இரவு காடையம்பட்டி பிரிவில் வரதநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசமூர்த்தி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது.

    அதேபோல் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கோவிந்தராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடியதை ஒப்பு கொண்டு உள்ளனர். அகமது என்கிற அம்மானு ல்லா அக்கா நிஷா என்பவரிடம் 08 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு அவர் கோவை பெண்கள் மத்திய சிறையில் உள்ளார். மீதமுள்ள 17 பவுன் நகைகளை ஊராட்சி கோட்டை மலை அடிவா ரத்தில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்ததை தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று நகைகளை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் பவானி குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் கோபி மாவட்ட சிறைச்சா லையில் அடைத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    Next Story
    ×