search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு முகாம்"

    • 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்
    • பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது

    வேலூர்:

    2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டியலில் பெயர், சேர்ப்பு, நீக்கல் தொடர்பான சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

    வேலூர் மாவட்டத்தி ற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க வசதியாக, நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் அடங்கிய பட்டியல், தேர்தல் ஆணையத்தில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தொகுதி வாரியாக ஒவ்வொரு பக்கமும் மீண்டும் சரிபார்க்கப்படும்.

    இதில் திருத்தம் இருப்பின், வருகிற 27-ந் தேதி நடக்கும் சுருக்கத்திருத்த பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சரிபார்ப்பு பணிகளுக்கு ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் 5 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

    • புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இந்த‌ மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் வெள்ளகோவில் காடையூரான்வலசு பகுதியில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. வெள்ளகோவில் காடையூரான்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமானது பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார்.மேலும் இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் டாக்டர்.காவ்யாஸ்ரீ மற்றும் மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    • முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

    காங்கயம்:

    காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச ஆடியோகிராம் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் அதற்கு உண்டான மருத்துவம் அளிக்கப்படும். ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

    குறைபாடு உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் முகாமிற்கு வருபவர்கள் தங்கள் புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை,முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் பழைய குடும்ப அட்டை இவைகளை கண்டிப்பாக எடுத்து வரவும் தெரிவித்தனர்.

    • இல்லந்தேடி நேரடியாக முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறுவது தொட ர்பாக அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் முன்னோடி வங்கி அலுவ லர்கள் இணைந்து சிறப்பு முகாம்கள் மற்றும் இல்லந்தேடி நேரடியாகவும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த முகாம்களில் இது வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் விண்ண ப்பிக்கலாம். விவசாயகடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் கடன்க ளுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும். விவசாயகடன் அட்டை மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.

    மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்க ப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெற வாய்ப்பு உள்ளது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.

    விவசாய கடன் அட்டை கடன் பெற விவசாயிகள் தங்களின் நிலஆவணங்கள் (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்), ஆதார் அட்டை, பான்கார்டு, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடை யாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலி க்கப்பட்டு விவசாயிகளின் விவரம் மற்றும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிலம், பயிர் கடன் அளவீடு பொறுத்து கடன் வழங்கப்படும்.

    எனவே இது வரை விவசாயகடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம் நடைபெறும் விபரங்கள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குர்களை தொடர்பு கொண்டு விவசாயகடன் அட்டை பெற்று பயன்பெறு மாறு கேட்டுக்கொண்டு ள்ளனர்.

    • வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
    • நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4-ந் தேதி, 5-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இறுதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    1-1-2024 அன்று 18 வயது நிரம்பி அதாவது 1-1-2006-ம் நாளுக்கு முன் பிறந்து இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களையும், புதிதாக குடி பெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களையும வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற 27-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு அந்தந்த வாக்குச்சாவடி அமைவிட அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுத்து அற்கான ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமும் www.nvsp.இந்த மற்றும்Voters helpline App-ல் பதிவு செய்து குறுஞ்செய்தி மூலம் பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு ஆன்லைனை பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பது மட்டுமில்லாமல் இறந்து போன வாக்காளரை நீக்கலாம். ஆன்லைனை பயன்படுத்தி படிவங்களை பதிவேற்றம் செய்து ஒருவர் எத்தனை வாக்காளர்களை வேண்டுமானாலும் நீக்கலாம். அவ்வாறு செய்ய விரும்புவோர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊர் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் மற்றும் கட்சியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    • முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூர் ஏவிபி., சாலை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம், அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம். அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்தவேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி.

    மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    • நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
    • இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில், மாற்றுத்திறனாளிக்கான 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான பட்டா வேண்டி மனு அளித்தனர்.

    மேலும், மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டி மனு அளித்தனர். முகாமில், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஆறுமுகம் மனுக்களை பெற்றனர்.

    மேலும், மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலைக்கேற்ப அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் துணை தாசில்தார் அபிராமி, மண்டல துணை தாசில்தார்கள் பாலகுருநாதன், மூர்த்தி, நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியங்கா,

    கிராம நிர்வாக அலுவலர் கலா, டிசம்பர் 3 இயக்கம் மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் எலும்பியல் மருத்துவர், நரம்பு மண்டல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர். இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
    • புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது

    செம்பட்டி:

    தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ண ப்பங்கள் நிராகரிக்கப்ப ட்டன.

    தமிழக அரசு தகுதியான வர்கள் விடுபட்டிருந்தால் அந்தந்த தாலுகா அலுவல கத்தில் மேல்முறையீடு செய்யலாம். புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்க லாம் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். உரிமை த்தொகை திட்டத்தில் தாங்கள் விடுபட்டதற்கான காரணங்களை அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்தனர். சிலருக்கு விண்ணப்பம் பரிசீலனை யில் உள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தாலுகா அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

    • தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது.
    • மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதா யத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய, மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, கால்ந டைத்துறை, கைத்தறித்துறை, தாட்கோ, கதர்கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்து மானியத்துடன் இணைந்த கடன் திட்டங் களுக்கும், கடனுதவிக்கான வசதியமைப்புகள் வழங்கப்படும்.

    மேலும் கடன்தொகை விடுவிப்பு குறித்து, பயனா ளிகளுக்கு தேவையாகன ஆலோசனைகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் இக்கடன் திட்ட முகாமில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

    எனவே தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், புதிய தாக கடனுதவி பெற விரும்புபவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் துவங்கப்படும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளுடன் நேரில் வந்து முகாமில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதி வேற்றம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • இன்று முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

    இந்தநிலையில் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.

    இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் கூறுகையில்:-

    விநாயகர் சதுர்த்தி அன்று பலர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.

    இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அதை எளிமைப்படுத்த வேண்டும்.

    மேலும் சிலை ஊர்வல பாதைகளை சீரமைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்றனர்.

    சிறப்பு முகாம்

    பின்னர் உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், சிலைகள் வைக்க அனுமதி பெற அனைத்து துறை களையும் ஒருங்கிணைந்த வேலூர் உட் கோட்டத்து க்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை சிறப்புமுகாம் நடைபெறும்.

    அதில் சிலை வைக்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு விண்ண ப்பங்களை அளித்து அனுமதி பெறலாம் என்றார்.

    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடை பெறவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    பொது விநியோக த்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) வட்ட வழங்கல் அலுவல கங்களில் நாளை(9-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடைபெ றவு ள்ளது.

    இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரியும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் ஆகியவை தொடர்பாக மனு அளிக்கலாம்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு மேற்காணும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    ×