என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆத்தூர் தாலுகாவில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்
- மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
- புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது
செம்பட்டி:
தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ண ப்பங்கள் நிராகரிக்கப்ப ட்டன.
தமிழக அரசு தகுதியான வர்கள் விடுபட்டிருந்தால் அந்தந்த தாலுகா அலுவல கத்தில் மேல்முறையீடு செய்யலாம். புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்க லாம் என அறிவித்துள்ளது.
அதன்படி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். உரிமை த்தொகை திட்டத்தில் தாங்கள் விடுபட்டதற்கான காரணங்களை அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்தனர். சிலருக்கு விண்ணப்பம் பரிசீலனை யில் உள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாலுகா அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story






