search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free medicine"

    • முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார்
    • ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பரஞ்சேர்வழியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    1996-ம் ஆண்டு 4-வது முறையாக தமிழக முதல்வராக கலைஞர் பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல், கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க, இது சிறந்த திட்டமாக உள்ளது. இன்று பரஞ்சேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற ஒரு இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். என்றார்.

    முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுவான நோய்கள், இருதய நோய், சர்க்கரை நோய், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை தொடர்பான நோய், கண் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகளுக்கான மருத்துவம், தோல் நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முகாம் மூலம் 480 பேருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்று பணிபுரிந்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இந்த‌ மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் வெள்ளகோவில் காடையூரான்வலசு பகுதியில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. வெள்ளகோவில் காடையூரான்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ×