search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சு சாம்சன்"

    • முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
    • ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 14வது ஓவரிலேயே இலக்கை எட்டியது.

    துவக்க வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டினார். 13 பந்துகளில் அரை சதம் கடந்த ஜெய்ஸ்வால், தொடர்ந்து பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 97 ரன் எடுத்திருந்தார். 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்து, வெற்றியை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார்.

    எனவே 41 பந்துகள் மீதமிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    • இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது.
    • ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும்.

    ஐபிஎல் தொடரின் 52-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் 217 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாவது:-

    இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது. சந்தீப் சர்மா மீது அதிக நம்பிக்கையில் இருந்தேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று அறிவிக்கப்படும் வரையில் உங்களால் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கவே முடியாது. சென்னைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மா தான் கடைசி நேரத்தில் வெற்றி தேடிக் கொடுத்தார். ஆனால், அவர் வீசிய நோபால் கடைசி நேரத்தில் எங்களது வெற்றியை பறித்து சென்றுவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எளிதான காரியம் எல்லாம் கிடையாது.

    ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும். அடுத்து வரும் போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி கடைசியாக நடந்த 6 போட்டிகளில் வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.

    • பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. இந்தப் போட்டி மூலம் நாங்கள் பல பாடங்களை கற்றுக் கொண்டோம்.
    • பலமான பேட்டிங் வரிசையை வைத்துக் கொண்டு இந்த இலக்கை எடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. கெய்ல் மேயர்ஸ் அதிகபட்சமாக 42 பந்தில் 51 ரன் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    155 ரன் இலக்கை ராஜஸ்தான் அணியால் எடுக்க முடியவில்லை. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 10 ரன்னில் தோற்றது. ஜெய்ஷ்வால் 35 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி 2 சிக்சர்), பட்லர் 40 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அவேஷ்கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ராஜஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் 155 ரன் இலக்கு எடுக்க கூடியது தான். பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. இந்தப் போட்டி மூலம் நாங்கள் பல பாடங்களை கற்றுக் கொண்டோம்.

    பலமான பேட்டிங் வரிசையை வைத்துக் கொண்டு இந்த இலக்கை எடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. லக்னோ வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் அணி 7-வது ஆட்டத்தில் பெங்களூருவை 23-ந் தேதி சந்திக்கிறது.

    லக்னோ அணி 4-வது வெற்றியை பெற்றது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 22-ந் தேதி குஜராத்தை எதிர்கொள்கிறது.

    • 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு குஜராத் அணியை வீழ்த்திய சந்தோசத்தை கொண்டாடும் விதமாக அஸ்வின்- சாம்சன் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின், ராஜஸ்தான் அணி வீரர்களுடன் "நீங்க மட்டும் தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போட்டு சந்தோஷமா இருக்கீங்க. தம்பி அடிச்ச அடியில குஜராத்தே குலுங்கிடுச்சு என்று அந்த அணியை கலாய்த்து உரையாடினார்கள்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • ஐபிஎல் வரலாற்றில் ரஷித் கானுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார்.
    • ரஷித் கான் வீசிய 13-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்தார்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 177 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சந்திப் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார்.

    அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில் நங்கூரம் போல நின்று சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அந்த சமயத்தில் தேவையின்றி அவரது அருகே வந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்லெட்ஜிங் செய்து வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்துடன் வம்பிழுத்தார்.

    குறிப்பாக கடந்த வருடம் இதே மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் தோற்கடித்த மமதையில் சில வார்த்தைகளை உபயோகித்து பாண்டியா பேசியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

    ஆனால் அதற்காக பதறாமல் கவனத்தை சிதற விடாமல் பொறுமையாக இருந்த சஞ்சு சாம்சன், உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருபவர் ரஷித் கான். அவர் வீசிய 13-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்சர்களை தெறிக்க விட்டு பதிலடி கொடுத்தார்.

    சொல்லப்போனால் மாயாஜால ஸ்பின்னராக கருதப்படும் ரஷித் கானுக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றார்.

    இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மட்டுமே ரஷித் கானை ஹாட்ரிக் சிக்சர்களை தாண்டி தொடர்ந்து 4 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார்.

    இந்த போட்டியில் அவருக்கு நிகராக சிக்சர்களை தெறிக்க விட்ட சஞ்சு சாம்சன் வம்பிழுத்த பாண்டியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து 3 பவுண்டரி 6 சிக்சருடன் 60 (32) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். 

    • இந்தப் போட்டியில் சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.
    • ராஜஸ்தான் அணி ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரோட 23-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதல் இடத்தை பிடித்தார்.

    அவர் 115 போட்டிகளில் 29.76 சராசரியிலும் 139.10 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 3,006 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடங்கும். இதில் அவரது அதிகப்பட்ச ஸ்கோர் 119 ரன்கள் ஆகும்.

    ராஜ்ஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ரகானேவுக்கு அடுத்தப்படியாக அஜிங்க்யா ரஹானே (100 போட்டிகளில் 2,810 ரன்கள்), ஜோஸ் பட்லர் (63 போட்டிகளில் 2,508), ஷேன் வாட்சன் (78 போட்டிகளில் 2,372 ரன்கள்) மற்றும் ராகுல் டிராவிட் (46 போட்டிகளில் 1,276 ரன்கள்) உள்ளனர்.

    ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இடம் பிடித்திருந்த சஞ்சு, 29.23 சராசரி மற்றும் 136.76 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,683 ரன்கள் எடுத்துள்ளார்.

    ராஜஸ்தான் அணி ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. அவர்கள் மொத்தம் எட்டு புள்ளிகள் பெற்றுள்ளனர். 

    • 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றியை பெற்றபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தாமதமாக பந்து வீசியதாக ஆர்சிபி கேப்டன் டூ பிளிசிஸ்க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை அணி 3 வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    • இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 2 பந்தில் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 3 வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மோசமான சாதனையை படைத்துள்ளார். ராஜஸ்தான் வீரர்களில் 8 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் அவர் இருக்கிறார். 2-வது இடத்தில் ஷேன் வார்னே இருக்கிறார்.

    • சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் நான் வென்றதே இல்லை.
    • சென்னையுடனான போட்டியில் கடைசி 2 ஓவர்கள் மிகவும் பதற்றமாக இருந்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னி அணி 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றிக்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் நான் வென்றதே இல்லை. ஆனால் இன்று வெற்றி பெறவே விரும்பினேன். சென்னையுடனான போட்டியில் கடைசி 2 ஓவர்கள் மிகவும் பதற்றமாக இருந்தது.

    டோனி களத்தில் இருப்பது எதிரணிக்கு ஆபத்தான விஷயம். டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் பெரும்பாலும் பயனளிக்காது. அவரை வெல்வது எளிதல்ல. டோனிக்கு எதிராக எதுவும் வேலைக்கு ஆகாது. டோனியின் செயல்களுக்காக நீங்கள் அவரை போற்ற வேண்டும். டோனி மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

    என்று கூறினார்.

    • ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் அஸ்வின் இறங்கினார்.
    • ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் அஸ்வின் இறங்கியது குறித்து சாம்சன் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில்:-

    பட்லர் பீல்டிங் செய்யும்போது கையில் காயம் அடைந்தார். அதன் காரணமாக அவருக்கு தையல்கள் போட நேரம் ஆகும் என்பதனால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்கிற காரணத்தினாலேயே அஸ்வினை நாங்கள் துவக்க வீரராக அனுப்பினோம். அதற்குள் ஜாஸ் பட்லரும் தனது சிகிச்சை முடித்துக் கொண்டார்.

    பின்னர் அஸ்வின் ஆட்டம் இழந்ததும் மூன்றாவது வீரராக பட்லர் களம் புகுந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஜாஸ் பட்லரும் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    • பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

    முதல் போட்டியில் அரை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம்சன் இந்த போட்டியில் எடுத்து 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. சஞ்சு சாம்சன் : 3138* ரன்கள் (118 போட்டிகள்) 2. ரகானே : 3098 ரன்கள் (106 போட்டிகள்) 3. ஷேன் வாட்சன் : 2474 ரன்கள் (84 போட்டிகள்) 4. ஜோஸ் பட்லர் : 2378* ரன்கள் (60 போட்டிகள்) 5. ராகுல் டிராவிட் : 1324 ரன்கள் (52 போட்டிகள்)

    குறிப்பாக கடந்த வருடம் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் 2008-ல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ராஜஸ்தானை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். 

    • ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை வரும் 5-ம் தேதி எதிர்கொள்கிறது.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4-வது லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி வரும் 5-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக மோதுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விமானத்தில் உட்கார்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதனை ராஜஸ்தான் அணி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் யாரு தலைவர் ரசிகர் என்று தலைப்பிட்டுள்ளது.

    வீடியோ பின்னணியில் ரஜினி படையப்பா பட தீம் மியூசிக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×