search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023: ரகானேவின் நீண்டநாள் சாதனையை உடைத்து வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்
    X

    ஐபிஎல் 2023: ரகானேவின் நீண்டநாள் சாதனையை உடைத்து வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்

    • ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    • பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

    முதல் போட்டியில் அரை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம்சன் இந்த போட்டியில் எடுத்து 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. சஞ்சு சாம்சன் : 3138* ரன்கள் (118 போட்டிகள்) 2. ரகானே : 3098 ரன்கள் (106 போட்டிகள்) 3. ஷேன் வாட்சன் : 2474 ரன்கள் (84 போட்டிகள்) 4. ஜோஸ் பட்லர் : 2378* ரன்கள் (60 போட்டிகள்) 5. ராகுல் டிராவிட் : 1324 ரன்கள் (52 போட்டிகள்)

    குறிப்பாக கடந்த வருடம் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் 2008-ல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ராஜஸ்தானை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையும் படைத்தார்.

    Next Story
    ×