search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லக்னோவிடம் 10 ரன்னில் தோல்வி: ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் மீது சஞ்சு சாம்சன் பாய்ச்சல்
    X

    லக்னோவிடம் 10 ரன்னில் தோல்வி: ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் மீது சஞ்சு சாம்சன் பாய்ச்சல்

    • பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. இந்தப் போட்டி மூலம் நாங்கள் பல பாடங்களை கற்றுக் கொண்டோம்.
    • பலமான பேட்டிங் வரிசையை வைத்துக் கொண்டு இந்த இலக்கை எடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 10 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. கெய்ல் மேயர்ஸ் அதிகபட்சமாக 42 பந்தில் 51 ரன் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    155 ரன் இலக்கை ராஜஸ்தான் அணியால் எடுக்க முடியவில்லை. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 10 ரன்னில் தோற்றது. ஜெய்ஷ்வால் 35 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி 2 சிக்சர்), பட்லர் 40 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அவேஷ்கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ராஜஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் 155 ரன் இலக்கு எடுக்க கூடியது தான். பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. இந்தப் போட்டி மூலம் நாங்கள் பல பாடங்களை கற்றுக் கொண்டோம்.

    பலமான பேட்டிங் வரிசையை வைத்துக் கொண்டு இந்த இலக்கை எடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. லக்னோ வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் அணி 7-வது ஆட்டத்தில் பெங்களூருவை 23-ந் தேதி சந்திக்கிறது.

    லக்னோ அணி 4-வது வெற்றியை பெற்றது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 22-ந் தேதி குஜராத்தை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×