என் மலர்
நீங்கள் தேடியது "Eden Gardens"
- கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி கேகேஆர்-லக்னோ போட்டி நடைபெற இருக்கிறது.
- ஏப்ரல் 6ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க சிரமம் ஏற்படுவதால் வேண்டுகோள்.
ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளைமறுதினம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறும். மதியம் 3.30 போட்டி இங்கு நடைபெறுகிறது.
அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார் சாஹல்.
- சிறப்பாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் சேர்த்தார்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (10 ரன்), ரஹ்மானுல்லா (18 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 40 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், 57 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 22 ரன், ஆண்ட்ரே ரஸல் 10 ரன், ரிங்கு சிங் 16 ரன், ஷர்துல் தாக்கூர் ஒரு ரன், சுனில் நரைன் 6 ரன்னில் அவுட் ஆகினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.
- முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
- ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 14வது ஓவரிலேயே இலக்கை எட்டியது.
துவக்க வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டினார். 13 பந்துகளில் அரை சதம் கடந்த ஜெய்ஸ்வால், தொடர்ந்து பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 97 ரன் எடுத்திருந்தார். 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்து, வெற்றியை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார்.
எனவே 41 பந்துகள் மீதமிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.






