search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்.. கொல்கத்தா அணியை 149 ரன்னில் கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

    • ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார் சாஹல்.
    • சிறப்பாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் சேர்த்தார்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (10 ரன்), ரஹ்மானுல்லா (18 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 40 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், 57 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 22 ரன், ஆண்ட்ரே ரஸல் 10 ரன், ரிங்கு சிங் 16 ரன், ஷர்துல் தாக்கூர் ஒரு ரன், சுனில் நரைன் 6 ரன்னில் அவுட் ஆகினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.

    ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.

    Next Story
    ×