என் மலர்
நீங்கள் தேடியது "KKRvLSG"
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
- நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 48 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா அணி சார்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேப்டன் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் 30 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்க எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்.
- கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 8-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
- கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி கேகேஆர்-லக்னோ போட்டி நடைபெற இருக்கிறது.
- ஏப்ரல் 6ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க சிரமம் ஏற்படுவதால் வேண்டுகோள்.
ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளைமறுதினம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறும். மதியம் 3.30 போட்டி இங்கு நடைபெறுகிறது.
அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய லக்னோ 176 ரன்களை எடுத்தது.
கொல்கத்தா:
16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ அணி சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.






