search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தொற்று"

    • பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
    • கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.

    • இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படுகிறது.
    • நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும்.

    பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நாசி கொரோனா மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
    • சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

    சென்னை:

    சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது.

    இந்த புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

    அது மட்டுமல்ல இந்தியாவிலும் கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நுழைந்து விட்டது.

    இந்த வைரஸ் இதுவரை 3 பேருக்கு வந்து விட்டது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இது பரவும் என்பதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் இறப்பு இல்லை என்றாலும் கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்த மீண்டும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில், தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் அதை பரவாமல் கட்டுப்படுத்த என்னென்ன செய்யப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளதால் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    கொரோனா பரவிய சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக அரசு சார்பில் விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
    • நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 7 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் ஒருவர், தருமபுரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
    • அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார். சக பயணிகள் இதை வினோதமாக பார்த்தனர். இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதை ரயிலில் அவர் பயணித்தபோது வாழைப்பழம் சாப்பிடும்போது சக பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    • 71 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்
    • 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்த 71 பேர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.

    2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

    • சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 867 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

    கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

    இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 867 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 711 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குறைவதும் என மாறி, மாறி நிலவுகிறது
    • அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதும், பின்னர் குறைவதும் என மாறி, மாறி நிலவுகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் 9 பேர், தலைவாசலில் 2 பேர், சேலம் ஒன்றியம், ஓமலூர், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்த 3 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
    • அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.

    5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது.

    எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

    கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது.

    ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சென்னை மாநகராட்சியில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு.
    • பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஈரோடு, மதுரை, கரூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரேனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன.

    ஏற்கனவே 2 டோஸ் போட்டவர்களுக்கு 33-வது தடுப்பூசி முகாமில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.

    • கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்லவிருந்தார்.

    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரேனா தொற்று உறுதியானதை அடுத்து, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்தி, உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதனால், எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை மற்றும் நாளை காலை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' தேசியக் குழுவின் மூன்றாவது கூட்டத்திலும், நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்லவிருந்தார்.

    அப்போது அவர், பாஜகவின் தேசியத் தலைமையைச் சந்தித்து மாநிலத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    • கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
    • ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறை வளாகத்தினுள் ஹெபடைடிஸ் மற்றும் பிற நோய்த் தொற்றுகளை பரிசோதிக்கும் முகாம் நடத்தப்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சிறை அதிகாரி கூறுகையில், " கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

    இதற்கிடையே, கடந்த ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறை வளாகத்தினுள் ஹெபடைடிஸ் மற்றும் பிற நோய்த் தொற்றுகளை பரிசோதிக்கும் முகாம் நடத்தப்பட்டதாகவும் அதிகாரி கூறினார்.

    ×