search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தொற்று"

    • கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார்.
    • ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டில்,கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அங்கு லட்சக்கணக்கானோரின் உயிரைகொரோனா பறித்ததோடு பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார். இதனையடுத்து அந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அந்த அவசர நிலை உத்தரவு காலாவதியானது. இதற்கிடையே அதனை முடிவுக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    • கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 10 லட்சத்து 52 ஆயிரமாக இருந்தது.
    • கடந்த ஆண்டு சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    கடந்த 2020ம் ஆண்டு முதல் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தடைகளை மத்திய அரசு விதித்திருந்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே மாநிலங்களுக்கு இடையே மக்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பின்னர் நாட்டின் சுற்றுலா துறை மறுமலர்ச்சியை கண்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வந்ததாகவும் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி மாநிலங்களைவில் நேற்று தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. அதன் பலனாக கடந்த ஆண்டு சுமார் 60 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இது கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 10 லட்சத்து 52 ஆயிரமாக இருந்தது.

    நாட்டில் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும், பார்வையாளர்களுக்கு வளமான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளுக்கு சுற்றுலா அமைச்சகம் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கி வருகிறது.

    இவ்வாறு கிஷன் ரெட்டி கூறினார்.

    • 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோ னா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது.

    • ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது.
    • தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை.

    கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். இவற்றை 'நீண்ட (லாங்) கோவிட்' என அழைக்கின்றனர்.

    இதுபோன்ற நீண்ட கோவிட் பாதிப்புகள் சிலருக்கு முகம் குருட்டு தன்மை (புரோசோ பக்னோசியா) என்ற நரம்பியல் கோளாறை ஏற்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனால் முகங்களை அடையாளம் காண இயலாமல் போகலாம். இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் ஒரு ஆய்வை நடத்தினர்.

    இதில் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 54 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சினை இருப்பதாக கூறினர்.

    ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு முகங்களை அடையாளம் காண்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை என்று கூறினார்.

    கார்டேக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் சில தனி நபர்கள் நீண்ட கோவிட் காரணமாக சிரமங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

    • மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.
    • எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நியூயார்க்:

    மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.இந்த ஆய்வினால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
    • புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் பெங்களூரு நகரில் 24 பேருக்கும், கோலாரில் 3 பேருக்கும், சித்ரதுர்கா, ஹாசன், மண்டியா, உடுப்பி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பெலகாவியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 309 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் ஒன்றுக்கும் கீழ் உள்ளது.

    சீனா, அமெரிக்காவில் வேகமாக பரவும் 'பி.எப்.-7' என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. அதாவது குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்திலும் ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அது 'எக்ஸ்.பி.பி.1.5' வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.

    இந்த தகவலை சுகாதாரத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்.

    ======================

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்று தெரிவித்திருந்தார்.

    அதன்படி, சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்படுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடனே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.

    புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் முக்கிய நகரங்களில் சிட்னியும் ஒன்றாகும். மேலும் அதன் சின்னமான ஓபரா ஹவுஸில் பொது கவுண்ட்டவுன் மற்றும் வானவேடிக்கைகள் உலகம் முழுவதும் பெரும் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கும்.

    இதனால் சிட்னிக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிட்னியின் துறைமுகத்திற்கு வந்து வானவேடிக்கைகளைக் காண்பார் எகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி ஓபரா ஹவுஸின் நான்கு படகுகளில் இருந்து 2,000 வானவேடிக்கைகளும், சிட்னி துறைமுகப் பாலத்தில் முன்பை விட அதிகமான நிலைகளில் இருந்து 7,000 பட்டாசுகளும் ஏவப்பட்டு சிட்னி துறைமுகத்தை ஒளிரச் செய்யும்.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்பட்டு, கண்கவர் நிகழ்ச்சியை வடிவமைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    தொற்றுநோய்க்கு முன்னர், உலகின் பிற பகுதிகளிலிருந்து ஒரு பில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்ததால், சிட்னி மைதானத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விழாக்களில் கலந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

    • சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் சேர்த்து நேற்று வரை மாநிலத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக சேலம் மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், " சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய பி.எப்.7 கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்கள் வழியாக சேலம் வருபவர்களை கண்காணிக்க, துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கொடுக்கும் விவரங்கள் பெற்று, அதனடிப்படையில் அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள் என்றனர்.

    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. 


    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

    கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
    • கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.

    ×