என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி

- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்லவிருந்தார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரேனா தொற்று உறுதியானதை அடுத்து, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்தி, உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதனால், எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை மற்றும் நாளை காலை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' தேசியக் குழுவின் மூன்றாவது கூட்டத்திலும், நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க பொம்மை இன்று டெல்லி செல்லவிருந்தார்.
அப்போது அவர், பாஜகவின் தேசியத் தலைமையைச் சந்தித்து மாநிலத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.