search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடியேற்று விழா"

    • கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
    • இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு

    பாட்டாளி மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் சார்பில் கட்சி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவுக்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். விழாவில் கட்சி கொடியேற்றி, தமிழைத்தேடி பிரசார பயணம் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ, மாவட்ட தலைவர் அம்சா, அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் குணசேகரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டனர். இதில் கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் யுவராஜ், ரமேஷ், கணபதி, மணிகண்டன், குணா மகேந்திரன், சிவா மற்றும் மகளிர் அணி சுதா, கோமதி விஜயா, ராஜேஸ்வரி, பரிமளா, கலா, சுகன்யா, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்

    • ஜெயங்கொண்டத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது
    • மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய முன்பு கோட்ட ஊழியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்ட மத்திய மின் ஊழியர்கள் (சிஐடியு) சங்க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜேந்திரன் சிஐடியு கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில செயலாளர் அகஸ்டின் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்ட பொருளாளர் கண்ணன், கோட்ட செயலாளர் கண்ணன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    காரைக்குடி

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண விழாவினை முன்னிட்டு காரைக்குடி நகரில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, நகரச் செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஜெயபிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருணா, பாலா, சிவா, அழகேஷ், முத்து, மணி, புதுவயல் முகம்மது மீரா, கண்டனூர் குமார் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நாச்சம்மை, விஜி, சூர்யா, பிரதீக்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தையொட்டி கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொம்மன்பட்டி, கணேசபுரம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்புசாரா மாவட்ட தலைவர் சோனமுத்து தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், வட்டாரத் தலைவர் சுப்புராயலு, சமயநல்லூர் செந்தில் முன்னிலை வகித்தனர். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மணி வரவேற்றார். மாநிலத் தலைவர் மகேசுவரன் கொடியேற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முருகன், நாராயணன், முத்துமணி, வரிசை முகமது, முகமது இனியா, வீரபாண்டி, ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு மாநிலத் தலைவர் மகேசுவரன் மாலை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், மாவட்டத் தலைவர் சோனை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா.
    • நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    ஊட்டி :

    தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா குன்னூரில் இளைஞர் அணி சார்பில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமைவகித்து கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். நிகழ்சியில் நகர அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஜெகநாத், நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், ஜெகநாதன் ராபர்ட், குமரேசன், கோபிசாந், சந்திரன், வசந்தி, காவேரி, செல்வி, உமா மற்றும் நிர்வாகிகள் சிவா, பாலாஜி, சுரேஷ், ஹரி, விவேக், சதீஷ், மதி, அல்தாப், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் மாவட்ட அவைத் தலைவா் பில்லன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக் வரவேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: -

    தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நாளை (28-ந் தேதி) ஊட்டி மற்றும் குன்னூரில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

    அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கி உள்ள இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். கேரள மாநிலம் வழியாக தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் 29-ந் தேதி கூடலூா் வழியாக கா்நாடக மாநிலம் செல்ல உள்ளாா். இதில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளா்கள் ரவிகுமாா், தமிழ்செல்வன், விஜயாமணிகண்டன், நகர செயலாளா்கள் ஜாா்ஜ், ராமசாமி, ஒன்றிய செயலாளா்கள் லியாகத் அலி, லாரன்ஸ், காமராஜ், கண்டோன்மென்ட் நகரிய செயலாளா் மாா்டின், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், துணைத் தலைவா் உமா ராஜன், நகராட்சி தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், பரிமளா, சிவகாமி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் ராம்குமாா், மாயன், பேரூராட்சி தலைவா்கள் கலியமூா்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, சித்ராதேவி, வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கி கொடியேற்றினார்

    மங்கலம் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பல்லடம் ஒன்றியம் 63 வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூணுமடை, 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி கொடியேற்றினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், 63வேலம்பாளையம் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 63வேலம்பாளையம் கிளைசெயலாளர் சிவசுப்பிரமணி, கிழக்கு அண்ணாநகர் கிளை செயலாளர் சுரேஷ், பல்லடம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி ரவிசந்திரன் , மாணிக்காபுரம் ஊராட்சி செயலாளர் பூபதி மற்றும் கிளைச்செயலாளர்களான முருகன்,பிரகாஷ்,வலையபாளையம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காயத்ரி ரகுராம் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் :

    பா.ஜ.க. வெளிநாடு வாழ் ,அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தாராபுரம் பஸ் நிலையம் வடபுறம் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில்மாவட்டத் தலைவர் மங்களாபாளையம் ரவி,பா.ஜ.க. பொருளாளர் சுப்பு என்ற சிவசுப்பிரமணியம்,மாவட்ட துணைத்தலைவர் செல்வா பழனிச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார், விஜயசந்திரன், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன்,நகரத் தலைவர் செந்தில் தாஸ், நகர பொதுச்செயலாளர்மேஸ்திரி கதிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை யும் செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி, தலைவர் ஈசுவரசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் நாகமாணிக்கம், துணை தலைவர் விஜயகுமார், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, மடத்துக்குளம் ஒன்றிய பொருப்பாளர்கள் தியாகராஜன் மற்றும் சிவநாதன், மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம், வடிவேல் மற்றும் ரப்ரீக் ராசா, சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செய்தி தொடர்பாளர் சிலம்பரசன், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் சிவக்குமார் உட்பட 30க்கும்‌ மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    • மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில், ஓசூரில் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

    ஓசூர் ஜுஜுவாடி, பேகேபள்ளி, எழில் நகர் பாலாஜி நகர், சின்ன எலசகிரி,ஆர்.ஆர்.நகர், அண்ணாமலைநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த கொடியேற்று விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    மேலும் இதில், பா.ம.க. வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தகவல்தொடர்பு மாநில தலைவர் கனல் கதிரவன், வெங்கடேஷ், கஜேந்திரன்,விசுவநாதன், குணசேகரன், சக்திவேல், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி துணை மேயர் வக்கீல் தாமரைச்செல்வன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு கட்சியின் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் பன்னீர், சம்பத், செந்தில், கலைஞர், ராஜேஷ், தமிழரசன், சக்தி முருகன், குணத்தொகையன், கலியமூர்த்தி, மணிகண்ட ராஜா, பரசு.முருகையன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×