search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னூரில் நாளை"

    • நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் மாவட்ட அவைத் தலைவா் பில்லன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக் வரவேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: -

    தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நாளை (28-ந் தேதி) ஊட்டி மற்றும் குன்னூரில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

    அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கி உள்ள இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். கேரள மாநிலம் வழியாக தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் 29-ந் தேதி கூடலூா் வழியாக கா்நாடக மாநிலம் செல்ல உள்ளாா். இதில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளா்கள் ரவிகுமாா், தமிழ்செல்வன், விஜயாமணிகண்டன், நகர செயலாளா்கள் ஜாா்ஜ், ராமசாமி, ஒன்றிய செயலாளா்கள் லியாகத் அலி, லாரன்ஸ், காமராஜ், கண்டோன்மென்ட் நகரிய செயலாளா் மாா்டின், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், துணைத் தலைவா் உமா ராஜன், நகராட்சி தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், பரிமளா, சிவகாமி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் ராம்குமாா், மாயன், பேரூராட்சி தலைவா்கள் கலியமூா்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, சித்ராதேவி, வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×