search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் பைபிள் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின்  பார்கெஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, தாய் சிங் 15 மற்றும் 32-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்தார்.

    நார்த் ஈஸ்ட் அணி சார்பில் பர்த்தலோமியூ 29, 37, 39-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தனர்.

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் விலகியுள்ளார். #evinlewis #indvswi
    கவுகாத்தி:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். 

    ஏற்கனவே கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத நிலையில் லீவிஸ் விலகல், வெஸ்ட் இண்டீசுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் போட்டி அணிக்கு கீரன் பவெலும், 20 ஓவர் போட்டி அணிக்கு நிகோலஸ் பூரானும் சேர்க்கப்பட்டுள்ளனர். #evinlewis #indvswi
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி ஆகியோர் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 39 போட்டியில் 1573 ரன் எடுத்து உள்ளார். 9 ஆட்டத்தில் அவுட் இல்லை என்பதால் சராசரி 52.43 ஆகும். 4 சதமும், 11 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 141 ரன்கள் குவித்துள்ளார்.

    தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 27 ஆட்டங்களில் விளையாடி 1387 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 போட்டியில் அவுட் இல்லை என்பதால் அவரது சரராசரி 60.30 ஆகும். 4 சதமும், 9 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 127 ரன் குவித்துள்ளார்.

    தற்போது நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 187 ரன்கள் தேவை. 5 ஆட்டத்தில் கோலியால் இந்த ரன்னை எடுக்க இயலும்.

    ராகுல் டிராவிட் 1348 ரன்னும் (40 போட்டி), கங்குலி 1142 ரன்னும் (27 போட்டி) அசாருதீன் 998 ரன்னும் (43 போட்டி) எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.



    தெண்டுல்கர், கோலி, டிராவிட், கங்குலி ஆகிய 4 இந்திய வீரர்களே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.

    இவர்களது வரிசையில் டோனி இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 101 ரன் தேவை. டோனி 33 போட்டியில் விளையாடி 899 ரன் எடுத்து உள்ளார்.

    5 ஒருநாள் போட்டியில் 101 ரன்களை எடுப்பதன் மூலம் அவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1000 ரன்னை கடப்பார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.
    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். #INDvWI
    ஐதராபாத்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆடியது. எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    113 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அதன்பிறகு சற்று நிமிர்ந்தது. ரோஸ்டன் சேஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டவ்ரிச் 30 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 52 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்னுடனும், பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

    இன்று 2-வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சேஸ், சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பிஷூ 2 ரன்களிலும், கேப்ரியேல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

    இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

    இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், பிருத்வி ஷா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன் சேர்த்து வருகின்றனர். #INDvWI
    ஆசிய கோப்பை பரிசளிப்பு விழாவின்போது வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்குமாறு ரோகித் சர்மாவை டோனி கேட்டுக்கொண்டார் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

    இந்தியா - வங்காள தேசம் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இடம் பிடித்திருந்தார். பரிசளிப்பு விழாவின்போது ஆசிய கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா வாங்கியதும், உடனடியாக கலீல் அகமது கையில் கொடுத்தார். கலீல் அகமது உற்சாக மிகுதியால் கோப்பையை தூக்கி காண்பித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.



    அறிமுக தொடரை இந்தியா கைப்பற்றியதில் அவருக்கு எல்லையிலா மகிழ்ச்சி. அத்துடன் கோப்பையை வாங்கியதும் அதைவிட மகிழ்ச்சி. நான் மிகவும் இளம் வீரர் மற்றும் எனக்கு தொடக்க தொடர் என்பதால் டோனிதான் ரோகித் சர்மாவிடம் கோப்பையை என்னிடம் வழங்குமாறு கூறினார் என்ற நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்கி இருவரும் கோப்பையை பெறுமாறு ரோகித் சர்மாவிடம் டோனி கேட்டுக்கொண்டார். ரோகித் சர்மா என்னிடம் கோப்பையை வழங்கினார்.

    ஏனென்றால், நான்தான் அணியில் இளம் வீரர். மேலும், இது என்னுடைய அறிமுக தொடர். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’ என்றார்.
    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார் அறிமுகமானது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Santro



    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ அறிமுகமானது. அக்டோபர் 23-ம் தேதி வெளியாக இருக்கும் சான்ட்ரோ முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், ஸ்பெட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய பம்ப்பர் மற்றும் முந்தைய சான்ட்ரோ மாடல் டால்-பாய் வடிவமைப்பு கொண்டுள்ளது.

    புதிய சான்ட்ரோ 2018 மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 98 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. AMT கியர்பாக்ஸ் சான்ட்ரோ பெறும் முதல் ஹூன்டாய் கார் மாடலாக இருக்கிறது.



    ஹூன்டாய் நிறுவனம் 1.1 இன்ஜினில் புதிய சான்ட்ரோ CNG வேரியன்ட் வழங்கப்படுகிறது. சான்ட்ரோ CNG வேரியன்ட் செயல்திறன் சற்று குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சான்ட்ரோ CNG வேரியன்ட் 58 பி.ஹெச்.பி. பவர், 84 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 

    புதிய சான்ட்ரோ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிலோமீட்டர், CNG வேரியன்ட் 30.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. காரின் உள்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க் மற்றும் குரல் அங்கீகார வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
    ஆசிய கோப்பை தொடரின்போது டோனியிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் தேர்வுக்குழுவினர் மிகவும் அதிருப்பதி அடைந்தார்களாம். #MSDhoni
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

    இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியை உறுதி செய்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்பட்டார். அவரைத் தவிர வேறு யாரையும் கேப்டனாக்க முடியாத நிலை ஏற்பட்டது.



    இப்படி தள்ளப்பட வேண்டிய சூழ்நிலை எற்பட்டதில் தேர்வு குழுவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். அவருக்கு கேப்டன் பதவியை அணி நிர்வாகம் கொடுத்ததில் அவர்கள் அதிருப்பதி அடைந்தார்கள் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

    டோனி ஏற்கனவே 199 ஒருநாள் போட்டியில் கேப்டனாக பணியாற்றியிருந்தார். இந்த போட்டியின் மூலம் 200 போட்டியில் கேப்டனாக பணியாற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக பணியாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியை இந்தியா கஷ்டப்பட்டு ‘டை’ செய்தது குறிப்பிடத்தக்கது.
    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜம்மு-காஷ்மீர் #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பந்து வீச்சு தேர்வு செய்தது. ஆட்டம் 41 ஓவர்களாக நடத்தப்பட்டது.

    அதன்படி தமிழ்நாடு அணியின் என் ஜெகதீசன், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிநவ் முகுந்த் உடன் முரளி விஜய் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    அபிநவ் முகுந்த் 49 ரன்னிலும், முரளி விஜய் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முரளி விஜய் ஆட்டமிழக்கும்போது தமிழ்நாடு 20.5 ஒவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் தமிழ்நாடு அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென விழ 39.4 ஓவரில் 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜம்மு-காஷ்மீர் அணி சார்பில் உமர் அலாம் 4 விக்கெட்டும், ரஸிக் சலாம், ரோகித் சர்மா, வாசீம் ரசா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆட்டமிழக்காமல் 70 ரன்னில் 71 ரன்கள் அடிக்க 40.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 பந்து எஞ்சிய நிலையில் ஜம்மு-காஷ்மீர் வெற்றி பெற்று தமிழ்நாடு அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் தமிழ்நாடு 8 போட்டிகள் முடிவில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 
     
    கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பாலோஆன் ஆனது. #INDvWI
    ராஜ்கோட்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

    முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 3 வீரர்கள் சதம் அடித்தனர். புதுமுக வீரர் பிரித்விஷா 134 ரன்னும், கேப்டன் வீராட் கோலி 139 ரன்னும், ஜடேஜா 100 ரன்னும் எடுத்தனர். ரி‌ஷப்பன்ட் (92 ரன்), புஜாரா (86) ஆகியோர் சதத்தை தவற விட்டனர்.

    தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டும், லீவிஸ் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்தது.

    ரோஸ்டன் சேஸ் 27 ரன்னும், கீமோ பவுல் 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 555 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடியது.


    இந்த ஜோடி சிறிது தாக்கு பிடித்து ஆடியது. உமேஷ் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். பவுல் 47 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 147 ஆக இருந்தது. இந்த ஜோடி 43 ரன் எடுத்தது. அடுத்து தேவேந்திர பிஷூ களம் வந்தார். மறுமுனையில் இருந்த ரோஸ்டன் சேஸ் 66 பந்தில் 50 ரன்னை எடுத்தார். சிறிது நேரத்தில் 53 ரன் எடுத்த நிலையில் அவர் அஸ்வின் பந்தில் வெளியேறினார். கடைசி 2 விக்கெட்டையும் அஸ்வினே தனது சிறப்பான பந்து வீச்சில் வெளியேற்றினார்.

    வெஸ்ட்இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி ‘பாலோஆன்’ ஆனது.

    அஸ்வின் 37 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ‌ஷமி 2 விக்கெட்டும், உமேஷ்யாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    468 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. #INDvWI
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC
    கொச்சி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் கொச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

    இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கேரளா அணியின் ஹலிசரண் நர்ஜாரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதியின் இறுதியில் கேரளா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 93-வது நிமிடத்தில் மும்பை அணியின் பிரஞ்சால் பூமிஜ் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேரளா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC
    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது. #INDvsWI #ViratKohli
    ராஜ்கோட் :

    இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அறிமுக வீரர் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தலும், புஜாரா - ஷா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தில் உதவியால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில் இருந்தது. முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

    கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் , விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் மறுமுனையில் அதிரடியாக விளையாடினார்.
     
    தொடர்ந்து விளையாடிய விராட் கோலி, டெஸ்ட் போடிகளில் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடிப்பார் என்று எதிரப்பார்க்கப்பட்ட பண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. விராட் கோலி 120 ரன்களுடனும், ஜடேஜா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #INDvsWI #ViratKohli
    ×