search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Cricket Team"

    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜம்மு-காஷ்மீர் #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பந்து வீச்சு தேர்வு செய்தது. ஆட்டம் 41 ஓவர்களாக நடத்தப்பட்டது.

    அதன்படி தமிழ்நாடு அணியின் என் ஜெகதீசன், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிநவ் முகுந்த் உடன் முரளி விஜய் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    அபிநவ் முகுந்த் 49 ரன்னிலும், முரளி விஜய் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முரளி விஜய் ஆட்டமிழக்கும்போது தமிழ்நாடு 20.5 ஒவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் தமிழ்நாடு அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென விழ 39.4 ஓவரில் 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜம்மு-காஷ்மீர் அணி சார்பில் உமர் அலாம் 4 விக்கெட்டும், ரஸிக் சலாம், ரோகித் சர்மா, வாசீம் ரசா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆட்டமிழக்காமல் 70 ரன்னில் 71 ரன்கள் அடிக்க 40.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 பந்து எஞ்சிய நிலையில் ஜம்மு-காஷ்மீர் வெற்றி பெற்று தமிழ்நாடு அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் தமிழ்நாடு 8 போட்டிகள் முடிவில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    ×