search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழித்துறை"

    • பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    குழித்துறை மேற்கு ெரயில் நிலையம் அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் ராஜ், ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.

    எனவே அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முகமூடி திருடர்கள் கைவரிசை
    • களியக்காவிளை போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் பிரவு சிங். இவர் குழித்துறை சந்திப்பு பகுதி யில் கடந்த 5 வருட மாக பேக்கரி கடை நடத்தி வருகி றார். நேற்று இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது பின்பக்க சட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    கடைக்குள்சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவ த்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. கடை யின் பணப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து பிரவு சிங் களியக்காவிளை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில் மர்ம நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கடைக்கு உள்ளே புகுந்து கல்லாவை உடைத்து பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.

    இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறை பகுதியில் அடிக்கடி கடைகளை உடைத்து திருட்டு நடப்பதால் கடை நடத்தி வருபவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலரின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன்படி நாகர்கோவில் கல்வி மாவட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஒன்றிய பகுதிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தின் கீழ் குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகள் மற்றும் ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தின் கீழ் கொல்லங்கோடு நகராட்சி மற்றும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், திருவட்டார் கல்வி மாவட்டத்தின் கீழ் குழித்துறை நகராட்சி பகுதிகள் மற்றும் மேல்புறம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

    அந்தந்த கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளி, நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்களும் அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நான்கு மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் அரசாணை எண் 151 -என்ற புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

    அந்த அரசாணைபடி, மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக தெரியவருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில் பகுதியில் ஒரு கல்வி மாவட்ட அலுவலகமும், தனியார் சுயநிதி பள்ளிகளுக்கென ஒரு மாவட்ட கல்வி அலுவலகமும் அமைய உள்ளதாக தெரிய வருகிறது.

    அரசின் இந்த முடிவு குமரி மேற்கு மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களை கொண்ட மார்த்தாண்டம் பகுதியை முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது.

    இதனால் கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    எனவே குமரி மாவட்டத்திலுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை, குழித்துறை என மூன்று மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    மேலும் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும். மேலும் குழித்துறை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டிரைவர் தாக்கப்பட்டதாக கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சாமு வேல் (வயது 25), தனது மனைவி அபிதா(20) வுடன் மார்த்தாண்டம் மார்க்கெ ட்டுக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அப்பகுதி யில் சென்ற அரசு பஸ் சாமுவேலின் இருசக்கர வாகனத்தில் மோதியது.இந்த விபத்தில் சாமு வேலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைய டுத்து சாமுவேல், பஸ் டிரைவருடன் வாக்கு வாதம் செய்தார். அப்போது சாமுவேல் மற்றும் அவரது மனைவிக்கு பஸ் டிரைவர் கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் படுகாய மடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு அணுகோடு பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் டிரைவர் ஏசுதாஸ், தான் தாக்கப்பட்டதாகவும், இதனால், குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டிரைவர் ஏசுதாசுக்கு ஆதரவாக குழித்துறை பணிமனை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பணி யாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே சிதறால் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 29) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சஜின் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார்‌. நேற்று சஜின் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சஜின் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவர் பொன். ஆசை தம்பி
    • தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக செப்பனிட ரூ. 14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் குழித் துறை முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் சாலை அமைக்காமல் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்கபடுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து அவர்கள் திடீரென அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபர ப்பும் பதட்டமும் நிலவி யது. இதனையடுத்து சாலை போடும் பணி நிறுத்த ப்பட்டது.

    இந்நிலையில் திடீரென பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் அங்கு வந்த குழித்துறை நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ் சாலை பணி தொடங்கிய நிலையில் தனக்கு தகவல் தரவில்லை என்றும் சேதமடைந்த பகுதியை மட்டும் சரி செய்து விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை செப்பனிடும் பணியை தடுத்து அதிகாரிகளிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் முறையாக தரமாக சாலை போட வேண்டுமென்றும், சாலை முறையாக உடைத்து சீரமைக்க வேண்டும் என்றும், மேலோட்டமாக சாலையை செப்பனிட கூடாது எனவும், இரவு நேரங்களில் சாலை போட கூடாது எனவும் அவர் கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதையடுத்து அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை செப்பனிடவும், சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளும் முறையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி போராட்டத்தை கை விட்டார்.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த த்தின் அடிப்படையில் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்து வரு கிறோம்.

    அடுத்து உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றனர். ஆனால் பொதுமக்கள் இதில் சமாதானம் அடையாமல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் ஆகியோ ரும் போராட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் ராஜா மற்றும் கவுன்சிலர்களும் சாலையை பார்வையிட்டு தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

    • சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் நியமனம்
    • கன்னியாகுமரியிலும் புற காவல் நிலையம் திறக்க வேண்டும்

    நாகர்கோவில், செப்.3-

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல் பட்டு வருகிறது.

    ரெயில்வே போலீசார்

    இங்கு ஒரு இன்ஸ்பெக் டர், 3 சப்-இன்ஸ்பெக் டர்கள் மற்றும் 25 போலீ சார் பணியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் முதல் திருவ னந்தபுரம் பாறசாலை வரை யிலும் நாகர்கோவி லில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும் ரெயில்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக ெரயில் களில் குட்கா கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயிலில் கடத்தப்பட்ட சுமார் 25 கிலோ கஞ்சா பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் குழித் துறை மற்றும் வள்ளியூர் பகுதிகளில் ஏற்படும் விபத்து களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு ரெயில்கள் தாமத மாக செல்வதாக புகார்கள் வந்தது. இதற்கு முக்கிய காரணம் போலீசார் நாகர்கோவிலில் இருந்து சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆவதால் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் இருந்து வந்தது.

    எனவே குழித்துறை மற்றும் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் புறகாவல் நிலைய அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட் டது. நீண்ட நாட்கள் கோரிக்கையான குழித்துறை மற்றும் வள்ளியூரில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. குழித்துறையில் ரெயில் நிலையத்திற்கு உள்ளே பிளாட்பாரத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ள னர்.

    இதே போல் வள்ளியூரில் முதல் பிளாட்பாரத்தில் புறகாவல் நிலையம் திறந்து செயல்பட்டு வரு கிறது. இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் முதல் கட்டமாக பணியமர்த்தப்பட்டு உள்ள னர். நேற்று முதல் புற காவல் நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. வள்ளி யூர் மற்றும் குழித்துறையில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் நடக்கும் குற்ற செயல்களை தடுக்க வும், ெரயில் விபத்துகளில் உயிரிழப்பு நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அதை மீட்பு பணியை மேற்கொள்வதற்கும் தற்போது இந்த புற காவல் நிலையங்கள் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

    குழித்துறை, வள்ளியூரில் புற காவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த போலீசாரே அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குறைவான போலீசாரே பணியில் இருந்த நிலையில் புற காவல் நிலையத்திலும் இங்கு உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே புற காவல் நிலையத்திற்கு புதிதாக போலீசாரை நியமனம் செய்து பணியமர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.மேலும் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.ஆனால் அங்கும் புறக்காவல் நிலை யம் இல்லை.

    எனவே கன்னியாகுமரியிலும் புற காவல் நிலையம் திறக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை பாலமலை செல்லும் சாலையில் செங்கல் சூளைக்கு விறகு ஏற்றிக்கொண்டு டெம்போ வண்டி சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டெம்போ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது இதனால் குழித்துறை சுற்றுவட்டார பகுதிகள் சுமார் 3 மணிநேரம் இருளில் மூழ்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் போக்குவரத்து சுமார் மூன்று மணி நேரம் வாகனங்கள் சிக்கித் தவித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டெம்போவை, ஓட்டுனர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் நேற்று இரவு குழித்துறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • அதிகாரிகள் ரூ.5,500 அபராதம் விதித்தனர்

    கன்னியாகுமரி:

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மக்கா பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் உத்தரவின் பேரில் குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்றுஅதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வெட்டுமணி பகுதியில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.5,500 அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று பிளாஸ்டிக் பைகள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.

    • மார்த்தாண்டம் போலீசில் புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறையை அடுத்த கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெனட் பாய் (வயது 60). ஓய்வு பெற்ற நர்சு.

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்த தலா ஒரு பவுன் எடை கொண்ட 6 தங்க வளையல்கள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் வீடு புகுந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இது பற்றி ஜெனட் பாய் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை களை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் ஜெனட் பாய் அந்த பகுதியில் உள்ள சிலர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள்
    • குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழித்துறை, பேச்சிப் பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குன்னுவிளை, சானல்கரை, சாஸ்தான்குளம், கோட்டை குளம், மணிவிளை, வட்டியூர் கோணம், கட்டச்சல், வைகுண்டம், நெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் நாளை (23-ந் தேதி) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரிகோடு, மாமூட்டுக்கடை, நெட்டி யான்விளை, காட்டவிளை, மஞ்சக்குளம், கரைக்காடு, பரக்குன்று, சாத்தன்கோடு, துவரச்சன்விளை,

    வாழ்வச்சான்பாறை, மூடோடு, சாண்டிபாறை, செழுவன்சேரி, தூப்புர மூலை, மணப்பழஞ்சி, நுள்ளிக்காடு, அயக் கோட்டிவிளை, மடத்து விளை, மாங்கோடு, காளை விழுந்தான்கோயில், ஐந்துளி, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×