என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே ரெயிலில் அடிபட்டு கொத்தனார் சாவு
    X

    குழித்துறை அருகே ரெயிலில் அடிபட்டு கொத்தனார் சாவு

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே சிதறால் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 29) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சஜின் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார்‌. நேற்று சஜின் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சஜின் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×