search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள்"

    • 8 ஆண், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
    • தீபாவளி பண்டிகைகளில் குழந்தை பிறந்தது தங்களுக்கு பரிசாக திகழ்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோர்ட்டு அருகில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன.

    அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் 8 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சுக பிரசவமாக 6 குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குழந்தைகளும், தாய்மார்க ளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தீபாவளி பண்டிகை பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலை மையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் பிற் காலத்தில் குழந்தை தொழி லாளர்களாக மாறுவதை தடுக்கும் வகையில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, காவல் துறை ஆள்கடத்தல் பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் கடந்த 13-ந்தேதி சிவகங்கை மற்றும் மானாமதுரை, 18-ந்தேதி இளையான்குடி புதூர் மற்றும் 20-ந்தேதி

    திருப்பாச்சேத்தி அருகில் டி.வேலாங்குளம் பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    இளையான்குடி புதூர் பகுதியில் 4 பள்ளி செல்லா இடைநின்ற மாணவ-மாணவிகள், மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்த 1 மாணவி ஆகி யோரை அவர்கள் வீட் டிற்கு சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

    மேலும் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா இடைநின்ற 1 மாணவியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப் பட்டுள்ளார். இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளிச்செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்ட றிந்து பள்ளிகளில் சேர்க்கப் பட்டு கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

    கரூர் 

    கரூர் மாவட்டம் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பள்ளி அளவில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணிக்கையில் இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பள்ளித் தாளாளர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரும், லயோலா கல்லூரி இயற்பியல் பேராசிரியருமான அறிவியல் கல்வியாளர் ஜோசப் சிறப்புரையாற்றினார்.

    பரணி பார்க் கல்விக் குழுமச் செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயலாளர் ஜான் பாட்சா, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.

    மொத்தம் 1186 அறிவியல் ஆய்வுகளை 152 வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் 2372 குழந்தை விஞ்ஞானிகள் இன்றைய அறிவியல் அமர்வுகளில் சமர்ப்பித்தனர். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிரபல அறிவியலாளர்கள் பெயரிலான 71 அறிவியல் அரங்குகளில் இணை அமர்வுகளாக நடைபெற்ற இப்பிரம்மாண்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானிகளின் அறிவியல் ஆய்வுகளை 142 பயிற்சி பெற்ற நடுவர்கள் மதிப்பிட்டனர்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் கரூர் மாவட்ட செயலாளரும் தமிழக முன்னோடி கல்வியாளருமான முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 17-வது ஆண்டாக சிறப்பான பயிற்சியளித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    ஏற்கனவே பரணி கல்விக் குழும இளம் விஞ்ஞானிகள் பல்வேறு தேசிய அளவிலான அறிவியல் மாநாடுகளில் தமிழகம் சார்பாக ஆறு முறையும், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் இந்தியா சார்பாக இரண்டு முறையும், மாநில அறிவியல் மாநாடுகளில் கரூர் மாவட்டம் சார்பாக தொடர்ந்து பதினேழு முறையும் சிறப்பாகப் பங்கு பெற்று கரூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இசை பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில்அமைந்துள்ளது.

    திருஞான சம்பந்தர் தேவாரத்தில் முதல் பதிகமான தோடுடைய சிவனே என்ற பதிகத்தை பாடி அருளிய தலமான இங்கு நவராத்திரி இசை விழா ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசை பள்ளி சார்பில் நடைபெற்று வருகிறது.

    அதுபோல இவ்வாண்டு நவராத்திரி இசை விழா நடைபெற்றது.

    இசை பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு தேவார பதிகங்கள், விநாயகர் துதி, சரஸ்வதி பாடல் உள்ளிட்ட பக்தி பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பாடினர்.

    இதில் குறிப்பாக 4 வயது முதல் மழலைச் சொல் மாறாத சிறுவர் சிறுமியர் இசை விழாவில் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    இவ்விழாவில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • 250 மனுக்கள் பெறப்பட்டது

    சிவகங்கை

    திருப்பத்தூரில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர் பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் கோமதி மனோஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் 8 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செவித் திறன் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர்; நீதிக் குழுமம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை (14-ந் தேதி) திருப்பத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இதில், காணாமல் போன குழந்தைகள், கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்) குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்> ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், போதை பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பாக பொதுமக்கள், குழந்தைகள் இம்அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தொடங்கி வைத்தார்
    • 1 முதல் 18 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம்

    கன்னியாகுமரி :

    மகாராஜபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட 1 முதல் 18 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தொடங்கிவைத்தார்.

    பஞ்சாயத்து துணைத்தலைவர் பழனிகுமார், வார்டுஉறுப்பினர்கள் அனீஸ்வரி, சுயம்பு லிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் மருத்துவர் ஜாம்ஷீர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் சிகிச்சை பெற்றனர்.

    • நரிக்குடி ஒன்றியம் வேளானூரணி கிராமத்தில் தொடக்கப்பள்ளி இல்லாததால் 3 கி.மீ. தூரம் சென்று குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்.
    • போராட்டத்தில் ஈடுபட போவதா கவும் வேளானூரணி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சுழிசு

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட வேளானூ ரணி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக்கல்வி பயின்று வருகின்றனர்.

    ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேளானூரணி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியே இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலுப்பையூர் பகுதிக்கு சென்று தான் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவ லமான சூழ்நிலை ஏற்பட்டுள் ளது.

    மேலும் இலுப்பையூர் பகுதியிலும் அரசுப்பள்ளி இல்லையென்பதால் அரசு உதவிபெறும் தனியார் பள் ளியிலேயே தங்களது குழந் தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதா கவும் வேளானூரணி கிராம மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.

    மழைக்காலங்களின் போது தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற் றோர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் ஆதங்கத்து டன் தெரிவித்தனர். இந்த நிலையில் இலுப்பையூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்வதற்காக வேளானூரணி கிராம மக் கள் தங்களது குழந்தைகளை பள்ளி வாகனத்திற்கென தனியாக பேருந்து கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கும் கஷ்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகி றது.

    மேலும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் வேன் கட்டணம் செலுத்த முடியாமல் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப இயலாமல் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் சூழ் நிலையும் உருவாக்கியுள்ள தாக பெற்றோர்கள் வருத்த முடன் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக வேளா ணூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு உள்ளதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத் திற்கு பலமுறை மனு அனுப் பியும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை யென புகார் எழுந்துள்ளது.

    மேலும், தங்கள் கிராமத் தில் அரசு தொடக்கப்பள் ளியை உடனடியாக கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட் டத்தில் ஈடுபட போவதா கவும் வேளானூரணி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

     திருப்பூர்:

    சுதந்திரப் போராட்டத் தியாகி கொடி காத்த குமரனின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகி குமரன் அறக்கட்டளையின் சார்பாக, திருப்பூர் குமரனை நினைவு கூறும் வகையில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டு உரையாற்றுகையில், இங்கு வந்துள்ள தாய்மார்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளைப் போலவே, உங்கள் மருமகள்களையும் உங்கள் பிள்ளைகளாக நினைத்து வழி நடத்த வேண்டும். அது மட்டுமல்லாது, படிப்பு ஒன்றே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு ஆண், பெண் என உங்களின் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வையுங்கள். கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றார். மேலும், சிலம்பம், யோகா, திருக்குறள் வாசிப்பு நடத்திய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 

    • அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
    • இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இதுகுறித்து காமன் இன்டியன்ஸ் தொண்டு நிறுவனத்தின் திருப்பூா் பிரிவு நிா்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 'இதயம் காப்போம்' என்ற குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை, ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்களை நடத்தத் தொடங்கினோம்.

    தற்போது 12 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள வித்யா மந்திா் பள்ளியில் அக்டோபா் 8 -ந் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

    அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் எக்கோ காா்டியோகிராம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குவா். தேவைப்படுபவா்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீட்டுத்திட்டம் மற்றும் எங்களது அமைப்பின் பங்களிப்புடன் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 'இதயம் காப்போம்' இலவச இருதய சிகிச்சை முகாம் மூலம் 380 குழந்தைகளின் உயிா் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

    • பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுர் அருகே கோட்டைமேடு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது35). இவர் தனது மகன் மேசாக் (11) மகள் மேகா (9) ஆகியோரு டன் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு அலங்காநல்லுர் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தார்.

    அப்போது கண்மணி மற்றும் குழந்தைகள் திடீ ரென மயங்கி விழுந்து உள்ளனர். பின்னர் கண்மணியிடம் போலீசார் விசாரித்தபோது, தான் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமார் 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரி வித்தார். மேலும் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த சரண் ராஜ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு சுமார் 2 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்த தாகவும் கூறினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணுடன் சரண் ராஜூக்கு திருமணம் ஆகி விட்டது தெரியவந்ததால் தன்னை சரண்ராஜ் ஏமாற்றிய மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து தானும், தனது 2 குழந்தைகளும் எலி பேஸ்டை சாப்பிட்டு விட்ட தாகவும் கூறி உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த போலீ சார் உடனடியாக அவர்கள் 3 பேரையும் அலங்காநல்லுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் காதலால் இளம்பெண் தனது இரு குழந்தையுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் கட்டிட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு, தேவையான ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி, கட்டிட கலைஞர் நல சங்க தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×