search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் -  வருகிற 8-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் - வருகிற 8-ந்தேதி நடக்கிறது

    • அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
    • இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இதுகுறித்து காமன் இன்டியன்ஸ் தொண்டு நிறுவனத்தின் திருப்பூா் பிரிவு நிா்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 'இதயம் காப்போம்' என்ற குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை, ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்களை நடத்தத் தொடங்கினோம்.

    தற்போது 12 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள வித்யா மந்திா் பள்ளியில் அக்டோபா் 8 -ந் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

    அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் எக்கோ காா்டியோகிராம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குவா். தேவைப்படுபவா்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீட்டுத்திட்டம் மற்றும் எங்களது அமைப்பின் பங்களிப்புடன் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 'இதயம் காப்போம்' இலவச இருதய சிகிச்சை முகாம் மூலம் 380 குழந்தைகளின் உயிா் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

    Next Story
    ×