குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது. இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
Published on

சிவகங்கை

தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை (14-ந் தேதி) திருப்பத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இதில், காணாமல் போன குழந்தைகள், கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்) குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்> ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், போதை பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பாக பொதுமக்கள், குழந்தைகள் இம்அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com